பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அப்பா !...' பார்வதி முணமுணக்கிறாள் ; உந்திக் கமலத்தின் மொட்டு வெடிக்கத் தவித்துத் துடிக்கின்ற கமலமாகக் கண்மூடிக்கிடந்த அழுகை, இருந்திருந்தாற்போல் கண் மலர்ந்து வெடித்து நெஞ்சுக்குள்ளே பாய்கிறது. உள்ளம் மட்டுமல்ல, உடலும்தான் நடுங்கித் தொலைக்கிறது. அவள் எதை நினைப்பாள் ?- எதை மறப்பாள் ? - நினை வும் மறதியும்தான் வாழ்க்கையா ? கனவுகளையும் காட்சிகளையும் பொய்யாக்கி விட்டு, அவள் மனம் சுழல்கிறது, கனவுகளிலே அவள் அந்தரங்க பூர்வமாகச் சுழல், நனவுகள் அவளுள் அறிவு பூர்வமாக சுழல் கின்றன. என்ன சத்தம் ? அம்மா புரண்டு படுக்கிறாள் ! பார்வதி இப்போதும் சிலையென மலைத்து நிற் கிறாள் . அம்மாவிடம் அப்பா அடிக்கடி சொல்லுவதை நினைத்துக் கொள்கிறாள் : சிவகாமி ! உலகத்தில் நடக் கக்கூடியதும் நடக்க வேண்டியதுமான வாழ்க்கை எதுவுமே அதனதன் விதிப்படியும் பிராப்தப்படியுந்தான் நடக்கும் ; நடக்கவும் முடியும். ஆகச்சே, நாம் என்னிக்கோ நடத்தப்போற அல்லது, நடத்தவேண்டிய தெய்வச் சித்தத்தின் பேரிலான கலியாணம் என்கிற கட்டாயமான ஒரு நாடகத்துக்காக, அதற்கான வேளைக்கு முன்னாடியே வெறும் மனுஷர்களாகிய நாம் வீணாக மனசைப் போட்டு அலட்டிக்கிறதிலே எந்த நியாயமும் எந்த அர்த்தமும் இல்லேன்னுதான் எனக்குத் தோணுது !... மூத்தவள் கமலி கல்யாணம் நல்லபடியாக நடந்தது மாதிரியே, சின்னவள் பார்வதியோட கலியாணமும் நல்ல விதமாகவே நடந் திடும் என்னை நம்பு ; ஏன் தெரியுதா ? - நான்