பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


பார்த்தாள். 'எனக்கு என்னமோ பயமா இருக்குங்க : என்று கலங்கினாள். 'கடைசி வாட்டியாக ஒரு தடவை நல்ல டாக்டர் ஒருத்தரை...' அவளால் பேச்சைத் தொடர முடியவில்லை. செந்தில் உதடுகளைப் பிதுக்கினான். நேரம் கெட்ட நேரம் தொலைபேசிக்குப் புரிவ தில்லை, 'இன்னும் கொஞ்ச நாழியிலே நான் அங்கே இருப் பேன். உன்னை என்னாலே எப்படி மறக்க முடியும் மாதங்கி? ஆல்ரைட் பார்வதி திகைத்தாள் ; மாதங்கியின் கதை தொடர் * தி (لاش கதையோ ? எப்போது முடியுமாம் ? திரும்பியவனின் கைகளில் காஞ்சிப் பட்டும் சோளியும் தளதளக்கின்றன. எலுமிச்சை நிறத்துக்குத் தனி அழகு தான் ! இப்போது பார்வதி திடுக்கிட வேண்டியவள் ஆனாள். தாழ்ந்திருந்த கண்களை நிமிர்த்தினான் செந்தில். அவை பார்வதியின் அழகான விழிகளை அழகாகவே ஊடுருவல் செய்திருக்க வேண்டும். கண் இமைப் பொழு தில் விரிந்து விளையாடவும் விளையாட்டுக் காட்ட வும் தொடங்கிய பழங்கனவுகளுக்கும் புதுக் கனவுகளுக்கும் இடையிலே ஊஞ்சலாடவும் அந்த இமைப் பொழுது பற்றாதா ? நெஞ்சம் இனித்துச் சிலிர்க்க மெய்மறந்து நின்றவன், சுயப்பிரக்கினை அடைந்தான். பெருமூச்சு நெஞ்சை அடைந்தது , சிரம் தாழ்த்தினான்.