பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


'நானும் ரெடிதான்!” எ ன் ற | ன் .ெ சந் தில். மாப்பிள்ளை முறுக்கோடு தோன்றினான் மாப்பிள்ளை யென்றால், சாமன்யமான மாப்பிள்ளையா ?- சிரஞ்சீவி மாப்பிள்ளை தலையை நிமிர்த்தி, விழிகளை உயர்த்தி எதிரே நின்றவளை எதிர்கொண்டு நோக்கினான்; அவன் மெய்சிலிர்த்தான்; மெய்மறந்தான் காஞ்சிப்பட்டிலே காஞ்சி காமாட்சி மாதிரியே தரிசனம் தராங்களோ பார்வதி ?... கையெடுத்துக் கும்பிட்டா என்னவாம் ??கூப்பாட்டுச் சத்தம் எதிரொலிக்கவே, தன் நினைவு பெற்றுத் திரும்புகிறான். திரும்பத் திரும்ப 'அம்மா ... அப்பா !' என்று கூப்பாடு போட்டாள் பார்வதி. ஊஹடும் !.... பெற்றோர்களின் காலடியல் நெடுஞ்சாண்கிடையா விழுந்து புரண்டு கதறினாள் பார்வதி: "நீங்க ரெண்டு பேரும் ஆள்மாற்றி ஆள் நொடிக்கு நூறுவாட்டி நோய் நொடியில் படுத்துக்கிட்டு என்னைச் சோதிக்கலையா? நான் ஒருவாட்டி உங்களைச் சோதிச்சதுக்காக இத்தனை தொலைவுக்கு நீங்க ரெண்டு பேரும் ஒண்னுகூடி அழுச் சாட்டியம் செஞ்சா, அது தெய்வத்துக்கு அடுக்குங்களா ? அப்பா...அப்பா !... காலங்காலமா நீங்க ஆசைப்பட்ட மாதிரியே உங்க பாருக்குட்டி, இதோ, திருமணக் கோலத் திலே அழுது துடிச்சுக்கிட்டு இருக்காளே ?- கண்ணைத் திறந்து பாருங்களேன் ... அம்மா...என்னைச் சுமந்த தய்வமே 1. உன்னோட கனவுப் பிரகாரம், நான் கல்யாணப் பெண் ண ா க மாலையும் கழுத்துமாய் நிற்கிறதையும், வெறும் பணத்துக்காகவோ, அற்பத்தன மான வரதட்சணைக்காகவோ இல்லாமல் எனக்காகவும் என்னோட துல்லியமான அன்புக்காகவும் மட்டிலுமே எனக்குத் துணை இருக்க முன் வந்த சமூகப் பிரக்ஞை