பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135


மோகினிச் சிலையின் அழகு முகமும் அழகுக் கண் களும் அழகாகவே வீங்கிக் கிடக்கின்றன ; தளிர் விரல் களோ, மார்பகத்தில் விளையாட்டுக் காட்டிக் கொண் டிருந்த மஞ்சள் தாலியோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தன:- என்னவோ அரவம் - யார் செந்தில் அல்லவா ? 'பார்வதி, நான் புறப்படுறேனுங்க!' 'ஊகூம் ; நீங்க புறப்படக் கூடாதுங்க, செந்தில்!” 'என் கடமைதான் முடிஞ்சிட்டுதே?' என் கணக்குப்படி, உங்க முதல் உதவி தான் இப்போ முடிஞ்சிருக்கு ; ஆனா, உங்க கடமை இனித்தான் ஆரம்ப மாக வேணுமுங்க - நீங்க எங்கழுத்திலே கட்டின மஞ்சள் தாலியிலே பூசின மஞ்சளோட ஈரம் இன்னங்கூட காயலிங் களே ? அதுக்குள்ளே, எங்கே புறப்பட்டுட்டீங்க?... ஏன் புறப்படுறிங்க ?” செந்தில் விரக்தியின் வேதனையைத் தாளமாட்டாமல் ஒப்பனைக்காகச் சிரிக்க முயற்சி செய்கிறான் ; நெற்றித் திட்டில் ரத்தச் சிகப்பாகப் பளிச்சிட்ட குங்குமத்தைக் கைவிரல்கள் தடவிப் பார்க்கின்றன. எச்சரிக்கையோடு வாசலை மறுபடியும் பார்த்தான். அவன் எதிர்பார்த் திருந்தபடி, வெளிப்புறத்திலே போலீஸ் ஜீப் வந்து நின்றதைப் பார்த்ததும், அவன் மறுமுறையாகவும் வெற்றிச் சிரிப்பு சிரித்தான். இப்போது அவன் பார் வ. தி ைய ப் பார்வையிடலானான். "மிஸ் பார்வதி நீங்களுமா இப்போது என்னைச் சோதிக்க வேனும் ?' என்று கேட்டான். பார்வதி ஈரல் குலை நடுங்கத் திடுக்கிட்டாள். மிஸ் பார்வதியா ? இப்பநீங்கதானே என்னை சோதிக்கிறீங்க, செந்தில்?’ தொண்டை அடைக்கிறது.