பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142


எனக்கு முறைப் பெண் என்பது பொய் இல்லை; எனக்கு வாழ்க்கைப்படுறதுக்காகப் பகீரதப் பிரயத்தனம் செஞ்ச வங்களிலே, உன் சிநேகிதி தாராவைப் போல, என் அம்மான் மகள் மாதங்கியும் ஒருத்தியாக இருந்தாள் என்கிறதிலேயும் தப்பு இல்லை தான் ! - ஆனாலும், தன்னோட காதலுக்குக் குறுக்கே நின்ன யாரையும் தன்னோட கபட வலையிலே சிக்க வைக்காமல் தப்பி விடச் செய்யறதுக்கு அவள் ஒப்பினதே கிடையாது - அவளோட விதிக்குத் தாராவாலேயும் விலக்காக இருக்க முடியல்லே அவள் காட்டின வழியிலே, திசைமாறிப் போயிட்டா தாரா ! - ஆனால். நீ தப்பிச்சிட்டே ; உன் சமர்த்தும் துணிவும் யாருக்கு வரும் ?... களை எடுத்தால் தானே பயிர் வளரும், பார்வதி ? அதே சட்டம் நம்ம சமுதாயத்துக்கும் உண்டுதானே? அதனாலேதான், இந்தச் சமுதாயம் சுகமாகவும் சுகத்தோடவும் வளரவும், மானத் தோடவும் மனிதத் தன்மையோடே வாழவும் வேண்டித் தான் விஷக்கிருமியான ஒரு சமூகப் புல்லுருவியைச் சமூகப் பிரக்ஞையோடவே ஏழாவது மாடியிலேயே வேரோடு பிடுங்கி வீசி எறிஞ்சிடவும் மனம் துணிஞ்சேன் -இந்த அளவிலே தார்மிகமான என்னோட சமுதாயக் கடன் நியாயமாகவே நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நான் நம்புகிறேன்!... பாவம், மாதங்கி! இன்றைக்கு சாயரட்சை சட்டப்பூர்வமாக எனக்கு வாழ்க்கைப்படக் கனவு கண்டுக்கிட்டு இருந்தா. எங்க கலியாணத்தை நடத்தி வைக்க உங்க முதலாளியும் கீழே காத்திருந்தார் !... பாவம் மாதங்கி!... கடைசியா இன்னொரு உண்மையையும் உன் கிட்டே சொல்லிடனும்; பாருக்குட்டி ! உன்னோட உயிர் எனக்குச் சொந்தமாக்கும்! - என் ஆணை இது; இதிலே தருமம் மட்டுமல்ல, சத்தியமும் உள்ளடங்க இருக்குது. சரி, சரி... வேளை நெருங்கிடுச்சு... இப்பவாச்சும் எனக்கு விடை தா, பாருக்குட்டி!' எப்படியோ, எப்பாடுபட்டோ, வெகு சமர்த்தாகவே பேசிவிட்டான் செந்தில் உடனேயே அவன் காவல்