பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்விசிறி நின்றது. பார்வதி நெடுமூச்செறிகிறாள்!- எங்க அம்மான் மகன் ஆனந்த் எங்க கமலிக்குத் திருப்பூட்டி பூரீ ரங்கத்துக்கு அழைச்சுக்கிணுபோய் விளையாட்டுப் போல வருடம் ஒண்னு ஆகப் போகுதுப் பாசத்தின் தவத்தில் மனம் நெகிழ்ந்தது! குடும்பத்தின் சுமையில் செம்பாதியைக் குறைத்து வைத்த புண்ணியவதி கமலி ! - திட்டமிட்ட பிரகாரம் இந்த வருடப் பிறப்பிற்கு இங்கே அவளால் வர முடியாமல் போய் விட்டதாம் ! - ஆபீஸ் போன கையோடு பதினைந்து பைசா செலவில் குடும்பத் தின் rேமலாபத்தை அக்காவுக்குத் தெரியப்படுத்திவிட வேண்டும், துளி தாமதித்தாலும், அவள் துளிகூட பொறுக்க மாட்டாள் !... ஏழ்மைக்கு பசியை மறக்கத் தெரிந்தாலும், பாசத்தை மறக்கத் தெரியவில்லையே : நகர்ந்தாள். - ஸ்டவ், தீப்பெட்டி எல்லாம் தயார். பால் வந்தது. பார்வதி அடுப்பைப் பற்ற வைத்து ஒரு மிடறு காப்பி யாகிலும் போட்டுக் கொடுத்தால்தான், சிவகாமிக்கு உடம்பிலும் சூடு பிடிக்கும் ; கண் மூடிக் கண் திறப்பதற் குள்ளே இட்டிலி சுட்டு, புதினா துகையலோ, தேங்காய்ச் சட்டினியோ அரைத்துத் தாளித்துவிடுவாள். அப்பால் பார்வதிக்கு அலுவலகத்தில் மத்தியான்னம் பசி ஆறுவதற் காக உப்பை முனைப்பாகத் துரவித் தயிர்ச்சாதம் பிசைந்து டி.பன்பாக்சில் நிரப்பி, பூண்டு ஊறுகாய் வைத்துத் தயாராக வைத்திருப்பாள். ராமையா பள்ளிக்கூடத்துக்கும் பார்வதி அலுவலகத்துக்கும் விடை பெற்றுச் சென்றபின். சிவகாமியும் ஆத்மநாதனும் ஜோடி சேர்ந்து கும்பகோணம் வெற்றிலையையும், சீவலையும் பன்னீர்ப்புகையிலையை