பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


யும் வாய் கொள்ளாமல் மென்று விழுங்கிய வண்ணம், ஜோடியாக நளபாகத்தில் இறங்கி விட்டார்களானால், சொல்லி வைத்த பாவனையில் மணி பன்னிரண்டு ஆகி விடும். நீராடி, நீறு தரித்து, பூஜை பண்ணி தம்பதி சமேதராக உண்டு முடித்து ஆளுக்கொரு முடுக்கில் உறக்கம் என்னும் சிறையில் அடைக்கப்பட்டு. பிறகு ஐந்துமணி சுமாருக்கு விடுதலை பெற்று விடுவதும் சகஜம். அப்புறம் சாயந்தரம் காப்பி வேளையில், வீடு கலகலப்பாகி விடும். இரவுச் சாப்பாடு தயாரிப்பது பார்வதியின் கண்ணியமான பொறுப்பாக அமையும். பறகு ... டிரான்ஸிஸ்டருக்குப் பொழுதுபோக அந்த குடும்பமே பொழுதுபோக்காகத் துணை நிற்பதும் நடைமுறைதான் சே ! என்ன ஜன்மம்... என்ன வாழ்க்கை ! பார்வதிக்கு இருப்புக் கொள்ளவில்லை. இருப்பு’க்கு எங்கே போவாள் அவள் ? காப்பி மணக்கிறது. பார்வதி தயாரிக்கும் காப்பியின் முதல்மரியாதை அம்மா சிவகாமிக்குத்தான் கிடைக்கும். பெற்றவளின் படுக்கையை நோக்கி நடந்தாள். அவளுக்கு அவளே சுமை 1 ரக ஆகிவிட்ட மாதிரியான ஒர் உணர்வு மறுபடி கிளர்ந் கெழுந்தது இப்படிப்பட்ட பரிட்சை நேரங்களில் அவள் தனச் குத்தானே சிரித்துக் கொள்வது வழக்கம்: பழக்கம் வள்ளுவத்தின் விதியை மீறக் கூடாதுதான் அரைக்கணம் அம்ம வை ஊடுருவினாள். குடும்பத்தில் இன்னம் மிச்சம் மீதம் இருந்த பாதிப் பாரத்தை நல்ல நேரத்தில், நல்ல படியாகக் கழித்து வைக்க வேண்டிய பொறுப்பான கடமை யின் ஆ தங்கம் அம்மாவின் வெளுப்பேறிய முகத்தில் துல்லியமாகவே தெரிந்தது எங்க பாரு குட்டியையும்