பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

அதோ :

சீர் பெற்ற வாலைக்குமரி, தாய் வீட்டுச் சீரென நின்று கொண்டே யிருக்கிறாள்!

“அம்மாடி!"

அம்மா :

மகாலட்சுமியாட்டமே இருக்கிற நீ மகாலட்சுமி யாகவே வாழ்வாய், தாயே!”

சுடுநீர் சிலிர்க்கிறது.

அலுவலகத்தின் எட்டு மணி நேர வேலைக்கு வீட்டை விட்டு ஒன்பது மணிக்குப் புறப்படுவதுதான் தர்மம் !

இல்லையென்றால் பதிப்பகம் கோபிக்காதா?

ட்ரங்குப் பெட்டியில் கைப்பையை எடுத்தாள் பார்வதி : கூடவே அந்தக் கடிதமும் வந்தது சாமான்யமான கடிதமா அது ?- அது காதல் கடிதம் ! யாரோ பத்தொன்பதாவது அசல் இளந்தமிழ்ச்சிங்கம் ஒன்று காத லாகி, கசிந்து, கண்ணீர் மல்கி வரைந்திருந்த கடிதம் ஆயிற்றே? அன்றைக்கு அப்பாவும் அம்மாவும் சிரித்த மாதிரி இன்றைக்குப் பார்வதியும் சிரித்தபடியே, அந்தக் கடிதத்தை அதே பெட்டியின் அடியில் திணித்தாள். கைப்பை கையோடு வந்தது,

என்னமோ சலசலப்பு.