பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


தோட்டம் வந்தது. நின்றாள். பூத்துக் குலுங்கிய ரோஜாப் பூக்கள் தூய்மையான நறுமணத்தைத் தூவியும் நுகர்ந்தும் காற்றில் ஆடின : சாய்ந்தாடின. ரோஜா என்றதும், செந்தில் தோன்றினான் ! செந்தில் என்றவுடன் டால்ஃபின் நிற்கிறது. அவள் மனம் மகிழ்ந்தாள், மனம் நெகிழவும் செய் தாள். செந்திலுக்கு ரோஜாப்பூ என்றால்தான் எவ்வளவு நேசம், பாசம், பிரியம் ! யார் இந்தச் செந்தில் ?... செந்தில் நாதன் என்கிற செந்தில் ஒரு நாளைப் போலவே தினமும் இனிமையான விடியல் நேரத்திலே இங்கே வருகிறார் ; தெருவிலே நிற்கிறார் ; வாசலில் நான் நின்றால், என்னை என்னவோ ஒரு நம்பிக்கையோடு கனவு காண்பவரைப் போலப் பார்க் கிறார். பெருமூச்சு விடுகிறார். பிறகு, தோட்டத்திற்குள் நுழைந்து, சமிக்ஞையில் அனுமதி கோரி, ஒரேயொரு ரோஜாப்பூவை மட்டிலும் அலுங்காமல் நலுங்காமல் கிள்ளி எடுத்துக் கொண்டு கைகளை ஆட்டி டாடா' சொல்லிக் கொண்டு, அழகான அந்த ரோஜாப்பூ வண்ணக்காரிலே பறந்து விடுகிறார் !... செந்தில் யாராம் ? நான் யாராம்? - இமைகள் துடிக்க நடந்தாள். தெருவிலே, பெரிய இடத்தைச் சார்ந்த பெரிய கல்யாண ஊர்வலம் ஒன்று வந்து கொண்டிருந்தது. பார்வதிக்குப் பெருமூச்சுத்தான் வந்தது. நம்ம மாதிரி சின்னச்சின்ன வீடுகளிலே பூச்சாண்டி காட்டுகிற இந்த வரதட்சணைப் பிசாசு இந்த மாதிரியான பெரிது