பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பார்வதி : மேல் வரிசையில் முன்பற்கள் இரண்டும் முத்தொளி சிந்துகின்றன. திரைப்படத் துறை நபர் உள்ளே சென்றார். ಟ್ರಿ காப்பிக்கோப்பையை வைத்துவிட்டு நகர்ந்தான். பார்வதி சுவரைப் பார்த்தாள். மணி பத்தரை. கடிகாரம் எப்போது பத்து அடித்தது ? வணக்கம், தம்பி ' 'ஓ ! அக்காவா ? வணக்கம். வணக்கம். புஸ்தகம் பண்டல் போடுறதிலே அக்கா வந்ததைக்கூட கவனிக்க முடியல்லீங்க ஒரே பேஜார் பிடிச்ச ஜோலியர்ய்ப் போச்சுங்க, அக்கா !” திரும்புகிறாள் பார்வதி. "குட் மார்னிங், மிஸ் பார்வதி , ' 'குட் மார்னிங், மிஸ்டர் கமல் ' 1985 வெளியீடுகள்' என்னும் அபய அறிவிப்பு'ச் செய்த விலைப்பட்டியல்கள் அம்பாரமாகக்குவிந்து கிடந்த மேசைக்கடியில் தலையைக் கூட்டுக்குள்ளே முடக்கிக் கொண்ட நத்தையைப்போலக் காட்சியளித்தவண்ணம்' பில் போடுவதில் மூழ்கியிருந்த பூபேந்திரகுமார் மட்டுந் தான் வாயைத் திறக்கவில்லை ! - அர்த்தம் இல்லாத அவனுடைய பார்வையின் நியாயப்படுத்த முடியாத அடாவடியை அங்கீகரிக்க மறுத்த பார்வதி, வாயைத் திறந்து பத்துப்பன்னிரண்டு பேர் முன்னிலையில் பகிரங்கமாகச் சூடு கொடுத்த அந்தச் சோக நிகழ்ச்சியை அதற்குள்ளே மறந்து விடமாட்டான் அவன், !