பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


அப்பொழுதும், மறந்து விடாமல் புன்னகை செய் தாள் பார்வதி. அதைத்தவிர, வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை 'அவளுக்கு. ஆனாலும் வேறு ஒன்றை மட்டிலும் தனக்குத் தானாகவும், தன்னில் தானாகவும் கேட்டுக் கொள்ளத் தோன்றியது!- எனக்கு மகாலட்சுமி அந்தஸ்து கிடைக்கிறது நடைமுறைக்குச் சாத்தியமான உண்மையாக இருந்திருந்தால், அந்த நாளிலேயே எங்கள் வீட்டிலே குபேரச் செல்வம் கொழித்திருக்க மாட்டாதா, என்ன ? நானும் என்றைக்கோ கழுத்திலே மூன்று முடிச் சைப் போட்டுக் கொண்டு, அக்கா வைத்துவிட்டுப் போன மீதிப் பாரத்தையும் கழித்து விட்டு அக்கடா வென்று மாமியார் வீட்டில் காலை எடுத்து வைத்து நுழைத்திருக்க மாட்டேனா, என்ன?-மேடைப் பிரசங்கத்திற்காக எழுதி வைத்திருந்ததை நெஞ்சிற்குள்ளே மனனம் செய்து கொள்ளுகிற பாவனையில், இப்பொழுதும்கூட அதே வாசகத்தை அச்சுக் குலையாமல் நினைவு கூர்ந்தாள் அவள். காலம் எப்படி எப்படியெல்லாம் அவள் குடும்பத்தைச் சோதித்து விட்டது அலைக் கழித்து விட்டது : 'பிராப்தம் என்கிற ஒன்று உண்மையிலேயே கைகூடி யும் வந்திருந்தால், எண்பத்தி மூன்றிலேயே அவள் மாலை யும் கழுத்துமாக ஆகிவிட்டிருப்பாளே ? ஒன்றுவிட்ட பட்டுக்கோட்டை அத்தை வீட்டின் சம்பந்தம் வரதட்சணைத் தகராறில் முறிந்து போகாமல், கல்யாண மும் ஜாம் ஜாமென்று நடந்து முடிந்திருக்குமே!... பார்வதி தவித்தாள் ! - காலம் ஒரு புள்ளிமான். கனகசபைச் செட்டியார் அங்கிருந்து கிளம்பிவிட்டா ரென்றால், பகல் மணி பன்னிரண்டரை என்று அர்த்தம்