பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


பார்வதி, வெலவெலத்து நின்று விட்டாள் ; நெஞ்சம் அழவே விழிகளும் அழுதன. மனம் அழும்போது, மனச் சாட்சி மட்டும் சிரிந்துக் கொண்டிருக்குமா, என்ன ? ஆனால் அவள் சிரிக்க முயன்றாள் இல்லையென்றால் வள்ளுவம் கோபிக்காதா ? ஆனாலும் அவளுக்குச் சிரிப்பு வர வில்லை ! 'பார்வதி, உன் இஷ்டப்படி நீ தேர்ந்தெடுக்கிற மாப் பிள்ளையைக் கொண்டு உனக்குத் திருப்பூட்டி வைக்க வேண்டியது என் பொறுப்பாக்கும் ! என்னை நம்மம்மா பார்வதி : பாசமான அன்பின் திருப்பாதங்களில் சரண் அடைந் தாள் பார்வதி. சுவர்க்கடிகாரம் ஒன்று. பிற்பகல் மணி ஒன்று அடித்தது சாயந்தரத்திலும் பார்வதிக்குக் காப்பிதான் பிடிக்கும் சாலமன் கொடுத்தான். புதிதாகப் பிறந்த தெம்போடு காப்பியைச் சுவைத்துக் குடித்தாள் பார்வதி. அப்போது ; நவீனமான பெண் பிள்ளையின் பெயரில் எழுதும் நவ ரசக் காதல் கதாசிரியரான ஆண்பிள்ளை ஒருவரும், ஆணின் பெயரால் எழுதிக் குவிக்கும் பெண் எழுத்தாளி ஒருத்தியும் மேலை நாட்டு இலக்கியத்தில் இன்க் கவர்ச்சிப் புரட்சி செய்த ஆசிரியர்கள் சிலரைப் பங்கு வைத்துத் துணைக்கு அழைத்துக்கொண்டு தனித்தனியாக உள்ளே பிரவேசித் தார்கள்.