பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 I நமக்கென்ன ? இவங்களுக்கும் நமக்கும் என்ன சம் பந்தம் ? ஊம் என்னைப்பத்தி நினைக்கவும் நினைச்சுப் பார்க்கவுமே பொழுது காணல்லேயே... கடவுளே !” பணி நேரத்தில் சொந்த முறையில் அவள் பத்து நிமிஷங் களை எடுத்துக்கொண்டது வெகு அபூர்வம். விரைந்தாள்! உள்ளே - பதிப்பகத்திற்கு உரித்தான பரபரப்பு குறைகுடமாகத் தளும்பிக் கொண்டிருந்தது. காலடியில் சிக்கிய அச்சுப்படி ஒன்றை எடுத்து வலம் புரியின் மேஜையில் போட்டுவிட்டு நடந்த பார்வதியின் பூவிரல்கள் தட்டெழுத்துக்களில் விளையாட தொடங்கின. மனத்தின் மனமோ, வீட்டைச் சுற்றிச் சுற்றி விளை யாட்டுக் காட்டத் தொடங்கிவிட்டது - அப்பாவின் துணையுடன் அம்மா இந்நேரம் மத்தியான்னச் சாப்பாடு செய்துகொண்டிருப்பாள் , தம்பிப் பயல் பாடங்களில் சிறைப்பட்டிருப்பான், கமலி பூரீரங்கத்தில் தனிமைச் சிறைவாசத்தை அனுபவித்துக்கொண்டிருப்பாள் ; அத் தான். ஃபைல் குவியல்களில் சரணாகதி அடைத்திருப் பார் ! அத்தான் இல்லாத தனிமையைப் போக்கிட கமலி யின் வயிற்றில் ஒரு பூச்சி பொட்டு இனியாகிலும் உண்டானால் தேவலாம் :- நான் கமலியை நினைக்கிற இந்நேரத்தில், கமலியும் என்னை நினைப்பாளா ? நினைத்துப் பார்ப்பாளா ?- நினைவுகள் சுழித்தன ; "பொறை ஏறியது. அரை வினாடி திக்கு முக்காடிப் போனாள் ; நாடி வந்த குளிர்நீரில் ஒரு வாய் பருகினாள்; இப்பொழுது கமலி கட்டாயம் என்னைப் பற்றித்தான் எண்ணிக்கொண்டிருக்க வேண்டும் - அங்கீகாரம் பெற்ற பாசத்தில் பிரகடனம் செய்யப்பட்ட நல்லமைதியில் அவளுடைய கண்கள் தளும்பின. பார்வதியின் கன்னி மனமும் ஆடும் பம்பரமும் ஒன்று ; காஷியர் சொல்ற மாதிரி நான் மகாலட்சுமியாக