பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


அப்பா முகம் கை கால் கழுவிக் கொண்டு, பூஜைத் கூடத்துக்குப் போய்த் திரும்பி அம்மாவின் தலை மாட்டில் வந்து குந்தினார். கொண்டவளைக் கண்கள் கொண்ட மட்டும் பாதாதி கேசம்வரை ஒரு முறை பார்வையிடலானார்; ஆற்றாமையால் பெருமூச்சுச் சீறுகிறது. சிவகாமியின் உள்ளம் தொட்டு புண்ணி யவான் அவளது உடலைத் தொட்டு எழுப்பினார். வாரிச்சுருட்டுக் கொண்டு எழுந்து குந்தினாள் சிவ காமி. உங்களைத்தானே நம்ம பார்வதிக் குட்டிக்கு நாம் இனியாச்சும் கல்யாணம் பண்ணிவச்சிட வேண்டா முங்களா; போன காரியம் என்ன ஆச்சு? . இந்த சம்பந்தம் சாடிக்கையாச்சும் திகைஞ்சிடுமுங்களா?” என்று வினவினாள். அவள் துரங்கின லட்சணம் இவ்வளவுதானா? - ஜனநாயகக் குடியரசின் கட்டமைப்பில், விடுமுறைக் குரிய வசதிகள் மற்றும் வாய்ப்புக்களையும்கூட, மேடுகளா கவும் பள்ளங்களாகவும் ஆக்குகின்ற, அல்லது, ஆக்கிக் கொள்ளுகின்ற பெருமையும் இந்த மனிதர்களுக்கே உரித்தாகிறது; ம்ேலும் இந்நிலைக்கு அவரவர்களின் நிலையும் சூழ் நிலையும்தான் காரணம் ஆகவேண்டு (βucπ? பார்வதியைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமை என்றால், விடுமுறையென்று அர்த்தம் இருப்பதில்லை; எனவே, மற்ற விடுமுறை நாட்களிள் அவளுக்கு விடுமுறை விதிக்கான ஒய்வு சகஜமாகக் கிட்டுவது கிடையாதென்பதும் பொருளாகிறது. காரணமும் காரியங்களும் தெரிந்தவைதான். அம்மாவுக்கு அடிக்கடி உடம்புக்கு வந்துவிடும் அம்மாவுக்கு ஒன்று என்றால் அதன் பந்தமும் பாதிப்பும் இயல்பாகவே அப்பாவையும்