பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


ஆத்மநாதன் ஆத்மார்த்தமா ைநம்பிக்கையோடு சிரித்தார் வேளை கூடி வந்தால், எல்லாம் கைகூடி விடும். நிம்மதியாகச் சாப்பிடலாம்; வா சிவகாமி !' என்று ஆதுரத்தோடு ஆதரவாகக் கொஞ்சினார் ; கெஞ்சினார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தட்டுக்களை எடுத்து வைத்தாள் பார்வதி, அவளுடைய தட்டும் கையோடு வந்தது ; அதை இடம் மாற்றி அலமாரியில் மேலே வைத்தாள். கமலியின் எவர் சில்வர் பிளேட்டை எடுத்து வைத்தாள். இப்போதெல்லாம் அவள் அதில்தான் சாப்பிடுகிறாள். பச்சைக் கொத்தமல்லி பசுமைப் புரட்சி செய்கிற போக்கில், அபாரமாக மணம் பரப்புகிறது. தாய் தந்தையர் சாப்பிடும் அழகைப் பார்த்துப் பரவசப்பட்டவளாகச் சாப்பிட்டாள் அவள். கொட்டாவி விட்டாள். "ஏங்க, நாளைக்குத்தானே ஞாயிற்றுக்கிழமை ?” என்று சந்தேகம் கேட்டாள் அம்மா. 'இல்லே ; நாளைக் கழிச்சு !' என்றார் அப்பா, அப்பட்டமான அலைக்கழிப்புக் கேலி ! உடனே, "அம்மாடி. பார்வதி ! எனக்குத் தெரியும். நாளைக்குத்தான் ஞாயிறு, லீவு ! நான் ளக்கு உனக்கு வீட்டிலேயும் கூட லீவு தான் வாரத்திலே ஆறுநாள் முடிச்சுடுந்தான் புத்தகக் கம்பெனியிலே அசராமல் வேலை பார்க்கிறே. வீட்டிலே ஒரு நாளாச்சும் உனக்கு முழுசா ஒய்வு வேணாமா ?' என்று நீதி ஓதினாள் அம்மாக்காரி. பேசிக்கொண்டிருக்கும்போதே, அம்மாவுக்குக் குரல் தழதழத்தது.