பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


பார்வதி திடுக்கிட்டாள் ; திகைத்தாள். ஏக்கமும் தவிப்பும் சூழ்ந்திட, அன்னையை நோக்கினாள். அம்மா வின் உடம்புக்கு ஒன்றும் வந்து விடவில்லை!-நெஞ்சிலே கவலைகள் கட்டு மீறுகையில், உணர்ச்சிகளும் கட்டுமீறிப் போய் விடுவது அம்மாவைப் பொறுத்தமட்டில் சர்வ சாதாரணமான நடவடிக்கைதான் :- நான் இன்னம் எத்தனை நாளைக்கு உங்களுக்காகக் கஷ்டப்படப் போகி றேன் ? முதலிலே வயிற்றுப் பாட்டைப் பார்ப்போம்!வா அம்மா சாப்பிடலாம் : அப்பா வந்து குந்துங்க,' என்று அழைத்தாள். சோற்றைப் பிசைந்து ஒருவாய் சாப்பிட்டு ஒரு வாய்த் தண்ணிரையும் குடித்தவள், “பாருகுட்டி ! நீ பேசுறதைப் பார்த்தால், ரொம்ப ரொம்பச் சீக்கிரத்திலேயே நீ கல் யாணம் பண்ணிக்கிட்டு எங்களை விட்டுப் பிரிஞ்சிடுவே போலத் தோணுதே ?... என்னமோ, கருமாரி கடாட்சத் திலே உனக்கு ஒரு நல்ல காரியம் சீக்கிரம் நடந்து முடிஞ்சா, எங்களுக்கு அதுவே போதும்டி, அம்மா” என்றாள். - பார்வதியின் மனம் விம்மிப் புடைத்தது. "உனக்குத் தான் பேசினாலே தொண்டையை அடைக்குமே ? பேசாமல் சாப்பிடு அம்மா...' என்று கேட்டுக் கொண்டாள். அப்பா தன்னுடைய மனக் குமைச்சலை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை ! இப்போது பார்வதி ஒரு முடிவுக்கு வந்தாள் ! அந்தச் செந்தில்நாதனும் இந்தச் செந்தில் நாதனும் ஒரே நப ராகவே இருக்க வேண்டும். நெஞ்சிலே பிறந்த முதற் காதலை வெளிப்படுத்தி மகிழ்ந்திட அவர் தனது பிறந்த மண்ணை ஏன் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது ?