பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

யெளவனப் பொலிவுடன் அழகாக எம்பித் தணித்த இளம் மார்பகத்தை மூர்த்தண்யமாக அழுத்தித் தேய்த்த நேரத்தில், செந்திலைப் பற்றி மாதங்கி பேசிய பேச்சும் அவளது நெஞ்சகத்தில் எதிரொலிக்க ஆரம்பிக்கிறது.

இனிமேல் செந்திலின் கடிதம் காற்றிலே பறக்காது!

குறிச்தியில் வந்தமர்ந்த பார்வதிக்கு 'அப்படின்னா இந்தச் செந்திலை அந்தத் தாரா காதலிச்சது பொய்யா கதையா, இல்லே,கனவா? ஓய்ந்த வலி ஓயவில்லை, கனா கண்டு விழித்தவளின் கண்கள் திறந்தன. பெண் மையின் செருக்கோடு விழிகளைத் தனித்த கம்பீரத் தோடும் இனித்த சத்தியத்தோடும் உயர்த்தி நிமிர்த்தினாள் : காதலாம், காதல்!... என்னைக் காதலிக்க இந்தச் செந்தில் யார்- நான் எங்கே?... செந்தில்நாதன் எங்கே? கொச்சைப்படாத மனிதாபிமானத்தின் நியாயப்படுத்தப்பட்ட ஒழுங்கோடு அவள் நிச்சலனமாகக் கண்களைத் திரும்பவும் மூடிக் கொண்டாள். உள்ளுக்குள்ளே என்னவோ சிரிப்பொலி கேட்டது. காதலுக்குச் சிரிக்கவும் தெரியுமோ? காதல் என்றால் என்னவென்று தாராவிடம் அன்றைக்குக் கேட்க எண்ணியதை நினைவு கூர்ந்தாள். இப்போது அவளுக்குத் சிரிப்பு வந்து விட்டது.

அவள்: பார்வதி!...