பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 பனகல் பூங்கா. ராஜகளை துளியேனும் இருக்காதா? மாலை மலரும் நோயின் சூழலில், இயற்கையை அணைக்க முயன்ற இருளை அணைத்தது மெல்லிய பூங்காற்று. எதிர்புறத்தில் பார்வதி வந்து நின்றதுதான் தாமதம் ; நெஞ்சடியில் கோடுகிறுக்கிக் கிடந்த பாதி அமைதியும் கலைந்துவிட்டமாதிரி உணரலா னாள் ; கழுத்தைச்சுற்றி முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டபோது, கண்பார்வையில் தென்பட்ட உம்மிடியாரின் தங்க நெக்லஸ் படவே, பற்று அறுத்த நிலையில் கண்களை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். ஆ ன லு ம், ஆற்றாமைச் சிரிப்பு அவளையும் மீறிகொண்டு வீரிடவே செய்தது. . மனிதமந்தை ஆத்திரமாகவும் ; அவசரமாகவும் நளிகிறது : ஊர்கிறது நகர்கிறது ; மோதிப்பிரியவும் தவறி விடவில்லை. ஜாதி முல்லை மணம் பரப்பிக் கொண்டேயிருந்தது. இரண்டு முழம் வாங்கிக் கொண்டாள் பார்வதி. அவளுக்கும் அம்மாவுக்கும் யதேஷ்டம் ! - கைப் பையி விருந்து எடுத்த ஒரு ரூபாயில் மிச்சமாகக் கிடைத்த பத்துப் பைசாவை உள்ளே போட்டு வைக்க ஜிப்பைத் திறந்தாள். "ஆத்தா, ஒம் புள்ளக்குட்டிக நல்லா இருக்கும் ; பத்துக்காசு தருமம் போடு, தாயே ' தாயான தோஷத்திற்குத் திருஷ்டி கழிப்பதுபோல் இடுப்பில் இடுக்கிக்கிடந்த நோஞ்சான் குழந்தையுடன்