பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


பாவம் இல்லை என்கிற பிரதிவாதத்திலேயும் இருந்தாக வேணும்.' வாஸ்தவம், பார்வதி ' என்று ஆமோதித்த தாரா சொன்னாள் : மிஸ்டர் செந்தில்நாதன் ஒரு ஜென்டில் மேன் , அவரை அவரோட திரண்ட சொத்துப் பத்துக் காகக் காதலிக்கலே நான் ; அவரை அவருக்காகவும். அவரோட நல்ல குணத்துக்காகவுமே மனசாரக் காதலிக் கிறேன். நேக்கு என்னோடகாதலே உலகம் ஆச்சு... இந்த விஷயத்தை அவரிடம் சொல்லுறதுக்கோசரம் அவரோட ஆத்துக்குப் போயிண்டிருந்தப்பத்தான், வழியிலே அவரை ஸ்கூட்டரிலே கண்டுட்டேன் , என்னையும் உட்கார்த்தி வச்சுக் கூட்டிண்டு வந்தார் ; அப்பத்தான் காலம்பற ஆக்சி டென்ட் ஏற்பட்டுடுத்து சாகப்பிழைக்கக் கிடைக்கிற தன்னோட தாயாருக்கும் தொகப்பனாருக்கும் ஆறுதல்ை ஏற்படுத்துறதுக் கோசரம் என் காதலை அங்கீகரிச்சு என்னை மாரேஜ் செஞ்சுக்கவும் முன்வந்தார் செந்தில் ...! "... ஆனா, என் ஃபாதரும்மதரும் ஒப்புத்துக்க மாட் டேன்னு அழும்பு பண்றாளே ?... என்னோட டியர் செந்திலை ரொம்பவும் கீழ்த்தரமா, அவா ரெண்டுபேரும் பேசினதைப் பொறுக்கமாட் டாமல், அவாளை வாய்க்கு வந்தபடி திட்டிப் போட்டுட்டு, என் வழியிலே இப்ப இங்கே ஓடிவந்துட்டேன். ஆகச்சே இந்தக் காதல் விவ காரத்திலே நீதான் ஒரு நல்ல தீர்ப்புச் சொல்லி, நீயே சாட்சியாகவும் இருந்து எங்களோட கலப்புக் காதல் கல்யாணத்தை முன்னே நின்னு நடத்தி வைக்கணும். கல்யாணம் முடிஞ்சுட்டா நான் அவரை செந்திலை எப்படியும் கண்காணாத ஒரு இடத்துக்கு அழைச்சிண்டு ஓடிடுவேன் இது பிரமாணமாக்கும்! ... பார்வதிக்குத் தலைவலி மருந்து தேவைப்பட்டது மெள்ள நகர்ந்தாள். தாரா பின்னே தொடர்ந்ததை