பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


அல்ல. ! - தாரா, இருட்டிப் போச்சே ? இன்னமும் இங்கே. தியாகராய நகரிலேதான் இருக்கிறீயா ? வீட்டிலே உன்னைத் தேடக்கீட மாட்டாங்களா ?” என்று இயல் பான அனுசரணையோடு விசாரித்தாள், விசாரணையின் நிர்த்தாட்சண்யத்தை அவளால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் போயிற்று. தாரா தட்டித் தடுமாறியவளாக, நடைபாதையின் சிமெண்டுத் தரையில் கால் பெருவிரல்களால் கோலம் போட்டவள், குனிந்திருந்த தலையைத் தயக்கத்துடன் நிமிர்த்தினாள். கண்களின் இமை விளிம்புகளில் பணி படரலாயிற்று. பார்வதிக்குச் சுருக்கென்றது; பதட்டமாக ஏறிட்டுத் தோழியை ஊடுருவினாள். தாரா சற்றுமுன்புதான் குளித்து முழுகி விட்டு வந்தவள் போலவே தோன்றினாள். பவுடர் ப் பூச்சின் பகட்டுக்கு 'ஒச்சம் சொல்ல முடியாது. சிவப்புக் கொன்றை மரத்தடியில் கைகளைப் பிசைந்த படி நின்று கொண்டிருந்தான் செந்தில். தாராவையும் பார்வதியையும் கண்டவுடன், புதிய தெம்பு கொண்டான்; இருவரையும் வரவேற்றான் இப்போதாகிலும் அவனுக்கு பார்வதியை அடையாளம் தெரிந்ததே ! - நல்லா இருக்கீங்களா, பார்வதி ?’ என்று பார்வதியிடம் குசலம் விசாரித்தான். 'ஏதோ இருக்கேனுங்க !’ என்றாள் பார்வதி. மெல்லிய பூஞ்சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டாள். பிறகு, மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தாள். உடம்பில் பரவிய பரபரப்பைச் சமாளித்துக் கொண்டாள். இப்போது அவள் பார்வை தாராவின்