பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ பார்வதிக்கு நல்ல மூச்சு வந்து வினாடிகள் இருபது ஆகியிருக்காதா ? விடிவிளக்கைப் போட்டு அறைக் கதவு களை லேசாகச் சாத்திவிட்டு வெளிக்கூடத்துக்கு வந்தாள். இதமான காற்றின் சுகத்தில், அவளுக்கும் கனவுகளில் குளிர் காய வேண்டும் போலிருந்தது. அந்தச் சுகானு பவம் ஒரு சில வினாடிகள் நீடித்தால்கூட போதும் ! உறையைப் பிரித்தாள் வகை வகையான காதல் கடிதங் கள் பிரிந்த பாங்கை வெகுவாகவே ரசிக்கவும் செய்தாள். மேலும் அக்கடிதங்களைப் பற்றி இன்னொரு சிதம்பர ரகசிய மும் இல்லாமல் இல்லை - அத்தனை காதல் கடிதங்களையும் தான் மாத்திரம் படித்துச் சிரித்ததோடு நிற்கவில்லை ; அவற்றைத் தனது பெற்றோருக்கும் வாய் விட்டுப் படித்துக் காண்பித்து மனம் விட்டுச் சிரித்து நையாண்டி செய்ததும் யதார்த்தமான நடப்பு : நடவடிக்கை. அத்தனை த ப ா ல் க ளு ம் காதலின் பெயரால் பார்வதிக்கு வந்தவை 1-யார் யாரோ இந்தியன்' என்ற உரிமையுடனும் தமிழன்' என்ற உறவுடனும் எழுதியிருந் தார்கள் - திரை நட்சத்திரங்களுக்கு இப்படிப்பட்ட கடிதங்கள் வருவது உண்டாம். அவள் படித்திருக் கிறாள். இவங்களுக்கெல்லாம் என் பேர் எப்படித் தெரிஞ்சுது : என்னோட இருப்பிடத்தைக்கூட சி ஐ டி. வேலை பண்ணி அறிஞ்சிருக்காங்களே? அவள் தன் னுடைய கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தாள். பதிப்பகப் பணியைத் தொடர்வதற்கு முன் இரண்டு இடங்களில் தற்காலிகமாக அலுவல் பார்த்தபோது. அங்கங்கே சந்திக்க வேண்டிய செல்வ செருக்குமிக்க அநாகரிகமான பார்வைகளாலும் பாவனைகளாலும்