பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 I 'மாப்பிள்ளை யார்னு கேட்க வில்லையே பாரு ?" "நீங்க...நீ சொன்னால்தானே ?" 'மாப்பிள்ளை உனக்குத் தெரிஞ்சவர்தான் !' 'எனக்குத் தெரிஞ்சவரா ? மாதங்கி, யாராம் அவர் ? 'தெரிஞ்சவர் மாத்திரம் கிடையாது ; ஒரு காலத்திலே உன்மேல் காதல் வசப்பட்டிருந்தவரும் கூட - அவர் உன்னை உசுருக்கு உசிராவே காதலிச்சார் ; அது சாமான்யப்பட்ட காதல் இல்லே - முதல் காதலாக்கும் சரி ; அந்த ஆளோட பேரைச் சொல் பார்க்கலாம் !' "நான் அறியாமலே என்னை நேசிச்ச ஒருத்தரோட பேரை என்னாலே எப்படிச் சொல்ல முடியும், மாது ?" மனிதாபி மானத்தின் இரக்கம் அவள் குரளிள் பேசியது: "ஓஹோ சரி ; நானே சொல்லிட்றேன் ... அவர்... அவர் தான் செந்தில் ... ஆமாம் ; மிஸ்டர் செந்தில் நாதன் அவர் 1 - அவர் எனக்கு முறை மாப்பிள்ளை வேறே : சொந்த அத்தை மகன் ! என்னை மாதிரி, அவரும் மேட்டுக்குடிப் புள்ளிதான் ! அவருக்கும் சேலம்தான் சொந்த ஊர் ' பெருந்தன்மையோடு சிரித்தாள் மாதங்கி. இப்போது, அதிர்ச்சியோடு வேதனையையும் அனுபவிக்க நேர்ந்தது. இதயத்தில் தாரா நிழலாடுகிறாள்; கூடவே செந்திலின் அழகான முகமும் நிழற்படம் காட்டியது சில நாட்களுக்கு முன் இதே பூங்காவில் தாரா தன்னுடைய காதலின் சிக்கலைப் பற்றிச் சொல்லித் தன்னிடம் ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டுமென்று கோரினாள். இப்போது மாதங்கி ... பார்வதிக்கு