பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


சிவப்பு விளக்குகளா ? இவள் ... இவள் கன்னி கழியாப் பெண்ணா ? ஊஹாம் ... யோசிக்காமல், ஜல்திபண்ணி ஏறு, பாரு உன் னோட மாமூலான உஷார்த்தனம் இப்பகூடவா தேவைப்படும் ' என்று செல்லமான அன்போடு மாதங்கி சிரித்தபடி பார் வதியைத் தூண்டினாள். பார்வதி காரில் ஏறியப்பின், ஆசனத்தில் சுரத்து இல்லாமல் அமரப்போனாள். அப்போது காலடியில் கிடந்த யாரோ முரட்டு ஆசாமி ஒருவன் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து கீழே ஒதுக்கமாக உட்காரலானான் . திறந்திருந்த கதவின் வழியாக, வேர்க்க விறுவிறுக்க வெளியேறி ஈரத் தரையில் பாய்ந்து வழுக்கி விழாமல் நின்றாள் பார்வதி ! - எரிமலையாகக் கனன்ற கண் களால் மாதங்கியை எரித்துப் பிடிசாம்பலாக்கிவிடத் தீர்மானித்தவள் போன்று, அவளை ஊடுருவி நோக்கி Görf了碗了。 அடுத்த இமைப்பொழுதில் மாதங்கி கலவரத்துடன் ஓடி வந்து பார்வதியின் கரங்களைப் பற்றினாள் 'காரிலே பின்னாடி உட்கார்ந்திருக்கிறவர் பெரிய சமூக சேவகர். பூர்மான் மாத்ருபூதம்னா எங்க இந்திரா நகரிலே சகலத்தனை பேருக்கும் தெரியும். திடீர்னு ஜூரம் வந்திட்டுது; அதுதான் காரிலே கீழே கிடந் திருக்கார் ! உங்க பா ஸ்’ திருவாளர் கனகசபை செட்டியாரை எங்க கிளப்பிலேருந்து வழியனுப்பிவச் சிட்டுத்தான் இங்கே ஒரு அவசரச் சோலியாய் வந்துக் கிணு இருந்தோம்; உன் முதலாளியைக் கேள்; எங்களைப் பற்றிய அருமை பெருமைகளைக் கதை கதையாகச் சொல்லுவார் ! - சரி, சரி - முன் சீட்டிலே