பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* . பாண்டி பஜார். பெருங்காய டப்பாவுக்கு உரியதான மதிப்பு மரியாதை எந்நேரத்திலும் உண்டு. என்னவோ மணியொலி. இடதுபுறம் ஒரம் விலகுகிறாள் குமரிப்பெண் பின்புறம் திரும்பிப் பார்க்கிறாள். "இருபத்திநாலு மணி நேர மருந்து ஷாப்புக்குத் தானே போகணுங்க ? வண்டிலே ஏறிக்கிடுங்கம்மா !” அதே இளவட்டம் கேட்டான் ; சொன்னான். அவன் ரிக்ஷாக்காரன் ? 'நீ யாராம் ?" "நான் பொதுவா ஒரு இந்தியன் ; குறிப்பா, ஒரு தமிழனுங்க ' அர்த்தமுள்ள பார்வையால் அந்த வாலிபனை அளந் தாள் அவள் ; சோகமும் சுகமுமாக முறுவல் பூத்தாள் இவளையும் தமிழ்ச் சினிமா வெகுவாகத்தான் பாதித் திருக்கிறது. பேசாமல் நடையைத் தொடர்ந்தாள் தலைவலியாய்த் திருகுவலியா, என்ன ? சைக்கிள் ரிக்ஷாவைத் தள்ளிக்கொண்டே அவளுக்குப் பின்னால் ஓடிவந்தான் அவன். நின்றாள்.