பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 யாருக்குச் சிவபிரான் உணர்த்தி, அவ்வாறே அவர்பெற, அடியவர்களைக் கொண்டு திருமணம் நிறைவேறச் செய்தருளினர். சங்கிலியாரோடு வாழ்ந்து வந்த வன் ருெண்டர் ஆரூர்ப்பெருமானைப் பிரிந்திருத்தலே ஆற்ருத வராகித் திருவொற்றியூரை விட்டுப் புறப்பட்டார். சங்கிலியாருக்கு அளித்த உறுதி மொழியினின்றும் தவறியமையால் நம்பியாரூரர் தம் கண்ணே இழந்துவருந்தி மேற்செல்வாராய்த் திருமுல்லை வாயில் சென்று வணங்கி அப்பர்ல் திருவெண்பாக்கம் சென்று, "ப்ெருமானே, திருக் கோயிலில் உள்ளீரா?’ என்று கேட்கவே, உளோம் போகீர்’ என்று பெருமான் அருளி ஒர் ஊன்றுகோல் உதவினர். அங்கிருந்து பல தலங்களுக்குச் சென்று காஞ்சீபுரம் கண்ணி இறைவர் அருளால் ஆரூார் இடக்கண் பெற்றனர். அப்பால் இடையிலுள்ள தலங்களை வழிபட்டுப் பாடித் திருவாரூரை அடைந்தார். அங்கே இறைவரைப் பாடி வலக்கண்ணையும் பெற்ருர். நம்பியாரூரர் சங்கிலியாரை மணந்த செய்தியை அறிந்த பரவையார் அவரை ஏற்றுக்கொள்ளாமல் ஊடியி ருந்தார். வன்ருெண்டர் வேண்ட, ஆளுர் இறைவர் இருகால் பரவையாரிடம் தாது சென்று ஊடலை நீக்கி மீட்டும் இரு வரும் இணைந்து வாழ அருள்புரிந்தார். இறைவரை ஏவல் கொண்டமைக்கு ஆற்ருத ஏயர்கோன்கலிக்காம நாயனர் கம்பியாரூரர்மேல் சினங்கொண்டிருக்க, அவ்விருவரையும் நட்புக் கொள்ளச் செய்ய எண்ணிய இறைவர் கலிக்காம ருக்குச் சூலநோய் வரச்செய்து, அதனைத் தீர்க்கும்படி கம்பியாரூரரை அனுப்பினர். இவரால் நோய் தீர்வதினும் இறப்பதே மேலென்று கருதிய ஏயர்கோன் உடைவாளால் தம் வயிற்றைக் கிழித்துக்கொண்டு இறந்தனர். அதுகண்டு