பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்ட்த்தொகை 99 கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன், கிறைக் கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற கின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன், துறைக்கொண்ட செம்பள்ளம் இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலே வாயிலான் அடியார்க்கும் அடியேன், அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. , 8 கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்' காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன், மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குத் தஞ்சை மன்னவ Hෂ් செருத்துஆேதன் அடியார்க்கும் அடியேன், புடை சூழ்ந்த புலியதள்மேல் அாவாட ஆடி பொன்னடிக்கே மனம்வைத்தபுகழ்த்துனேக்கும் ஆடியேன், அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. - : 9 பத்தாய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பாமனேயே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 10 மன்னியசீர் மறைநாவன் கின்றவூர்ப் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் தென்னவனுய் உலகாண்ட செங்கணுர்க் கடியேன் - - திருநீல கண்டத்துப் பாணனர்க் கடியேன் 9. ஆடி - ஆடுபவனது: