பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 சுந்தரர் தேவாரம் காரூர் கண்டத் தெண்டோள் முக்கண் கலைகள் பல வாகி, ஆரூர்த் திருமூ லட்டா னத்தே அடிப்பே ராளுரன், பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர், வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதிறே. திருச்சிற்றம்பலம் வரலாறு: திருவொற்றியூரிலிருந்து கண் இரண்டும் இன் ஜிப் புறப்பட்ட சுந்தரர் திருவேகம்பத்தில் ஒற்றைக் கண் பெற்று, பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருவாரூரை அடைந்தார் திருக்கோயிலிற் புக்குத் திருமூலட்டானத்தை இறைஞ்சி இப்பதிகம் பாடி மற்றைக் கண்ணும் அருளும்படி வேண்ட, இறைவர் அவ்வாறே கொடுத்தருளினர் (பெரிய. ஏயர்கோன், 308-310) - - 18. பண் - பஞ்சமம் திருவாரூர்ப் பாவையுண்மண்டளி திருச்சிற்றம்பலம் துவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள் காவாயே கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும் நாவாயால் உன்னேயே நல்லன சொல்லுவேற் காவாளன் பாவையுண் மண்டளி அம்மானே. 1. பொன்னனே புலவர்க்கு நின் புகழ் போற்றலாம் தன்னனே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதி மின்னனே செக்கர் வானத் திளஞாயி றன்னனே பாவையுண் மண்டளி அம்மானே. 2 1. தூவாயா: துர்வாச முனிவர் பூசித்த மூர்த்தியாதலின் துரவாயர் என்ற திருநாமம் அமைந்தது. ஐவர் . ஐம் பொறி கள். காத்திலும் - கின்பால் செல்லாமல் தடுத்தாலும். ஆவா என் - அந்தோ என்று இரங்குவாயாக. 2. புலவர்க்குப் பொன்னக இருப்பவன்.