பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பா) அப்பூதி அடிகளின் சிரத்தின்மேற் பொலிவது அரியும் அயனும் சிரமப்பட்டுக் காண விழைக்கது; அரியும் அயனும் தேட அவர்முன் அனலாய் கின்றது. அருந்தவர் கள் தொழுவது அற்ருர்க்கு அரும்பொருள் ஆவது, அறியாக அன்பர்கள் இட்ட இலையையும் பூவையும் அழகிய நறுமலரென ஏற்றுக்கொள்வது. அ ன் பு செய்வா ர்க்கு வானகம் அளிப்பது ; விளக்கம் தருவது ; அன்புடன் அழுவார்க்கு அமுகாவது ; அன்புடன் தொழுவோர் விண்ணுலகாள்வதற்கு ஏணிப் படி வழியை இட்டுச் கொடுப்பது ; அன்பு பூண்ட தொண்டர்களுக்கு இன்பர் கந்து துன்பங் களைவது, ஆறு சமயத்தார்க்கும் அவரவர் கொண்ட பொருளாய் வேருென்றும் இலாது விளங்குவது இமையோர் முகிவோர் வணங்குவது, இலக்குமி வாசம் செய்வது, உணர்ந்தோம் என்பார்க்கும் உணரலாகாதது, உத்தமர்கள் உள்ளத்தில், ஞானச் சுடராய் விளங்குவது, உலகெலாம் தொழுவது, உற்ருர் இலாதார்க்கு உறுதுணை யாய் நிற்பது ; ஏழுலகுக் கொழுவது; ஒளிபெருக்குவது, கணங்கள் தொழுவது, கருதிக் துதிப்போரை உலகாள வைப்பது, கலைகள் வணங்குவது, கற்ருேர் பரவுவது, காண் பதற்கரியது, காவிரியிற் குளித்துத் தொழும் பத்கர் களுக்குச் சுவை அமுது ஊட்டித் தேவர்கள் சூழ்ந் திருக்கும்படியான பெருஞ் செல்வத்தை விளைவிப்பது ; குறை முறையிட்டு |கின்ருேர்களைக் கவலையில் ஆழாவண்ணம் காப்பது ; கொடு வினேயார் கூடமுடியாதது ; கோடிக் கணக்கான தேவர்கள் வணங்கியது ; சார்க் கார்க்கு அடைக் கலம் ஆவது ; சிவன் எனச்சொல்பவருடைய தீவினையைத் தீர்ப்பது : ஞாயிறுங் கிங்களுமாய் கின்றது ; ஞாலமெல்லாம் வணங்குவது; கவர்கள் சிக்கிப்பது: திருமால் கியானிப்பது; திருமால் - பிரமன் - இந்திரன் - சந்திரன் - சூரியர் - அமரர் இவரெலாம் சயசய என்று கூறி முப்போதும் பணிவது; கிருமாலுக்கு அரியது; துயர் என்னும் வெயில் சுடும்போது கொண்டர்க்கு கிழலாய் உதவுவது ; தன்பக் கடலிடையே கின்று தோணிபோலக் கொண்டு செய் வோர்க்கு இன்பக் கரையைக் காட்டித் தெளிவு கருவது ;