பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) கலைப்பொருள், ஞானம் பெருங்கடல் அவர். ஞான விளக்கை ஏற்றி உண்முகத்தால் உணர்பவரின் ஊனத்தை ஒழிப்பார் அவர். ஞானத் தீயால் கள்ளத்தை ஒழிப்பவர் களின் உள்ளத்து ஒளி ஆவர் பிரானர். 'ஐந்தெழுத்தாகிய நமசிவாய' என்பதே ஞானமும் கல்வியும். 122. தலங்கள்: தலங்களைப்பற்றிய குறிப்புக்கள் (112 பல கலங்களின் பெயர்களும்-கல சேடமும கூறும் பதிகங்கள் 220,264, 288, 284, 806-எண்ணுள்ள பதிகங்கள். இவையன்றிப் பல பாடல்களில் ஆங்காங்குத் தலங்கள் கூறப்பட்டுள. உதாரணமாக 178-5, 8; 215-1, 2; 226-1, 4; 282-7 எண்ணுள்ள பாடல்களைப் பார்க்கவும். பின்னும் வீரட்டம், ஊர், கோயில், காடு, வாயில், துறை, மலை, சுரம், ஆறு, குளம், களம், கா, குடி, பள்ளி-என முடியும் தலப் பெயர்களைக் கூறி (பதிகம் 234) -இக் தலங்களை வணங்குங்கள், இத் தலப்பெயர்களைக் கூறுங்கள், உங்களுடைய இடர்கள் கொலையும், பரலோகம் கிடைக்கும், நீங்கள் சிவன் கமர் என்று உணர்ந்த நமன் தமர்கள் உங்க ளிடம் அனுகாத விலகுவார்கள் ; கொடிய வினைகள் உங்களைத் தொடராத விலகும் ; நீங்கள் கயிலாய நாதனேக் காணலாகும்-எனத் தெளிவுடன் அப்பர் பெருமான் அருளு ன்ெருர். இனி, ஒவ்வொரு தலமாக, அப்பர் யாது கூறி யுள்ளார் என்பதைக் கவனிப்போம். அவர் பாடியுள்ள தலங்கள், சொல்லியுள்ள கலங்கள் இவை என்பதை ஒளி நெறியின் முற்சேர்க்கையிற் காணலாகும். o தலங்கள் 1. திரு-அண்ணுமலை இங்கு அருவிகள் பொன் சொரியும், பாம்புகள் உமிழ் கின்ற மணிகளின் சோதி விளங்கும்; அரி (சிங்கம், குரங்கு) இவைகள் நிரம்ப இயங்கும்; அருவி நீர், சுனேகளில் வீழும்;