பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) தவழும் மாடங்களை உடைய ஊர் ; ஒலி நிறைந்த ஊர் ; கொடி விளங்கும் மகில்களைக் கொண்ட-விசித்திரமான ஊர். குளிர்ந்த சோலைகளைக் கொண்டு பெருங் காஞ்சி' யாய்த் திகழ்வது இவ்வூர். தேவேந்திரனுடைய காப்பினைக் கொண்ட சேத்திரம் இந்த ஏகம்பம் ; நாள்தோறும் தேவர்கள் அர்ச்சிக்கும் மூர்த்தி ஏகம்பர். அரிய தவத்தைச் செய்து வழிபட்ட உமையைப் பாகத்தில் ஏற்றவர் ஏகம்பர். தேவர்கள்,"பிரமன் திருமால் இவர்கள் ஒழுங்காக வழிபட்டேத்தத் தேவியுடன் பெருமான் திகழ்கின் ருர், பெருமான் உகந்த தலம் இந்த ஏகம்பம். ஏகம்பத்தை நாம் குறிப்புடன் சென்று தொழுகல் வேண்டும்; நாவினுல் அன்புடன் புகழவேண்டும், இழிந்த மக்கள் கச்சியைக் குறு கார் செல்வத் கிருவிழாக்களின் ஒசை ஒலி எப்போதும் முழங்கும் கலம் இது. பெருமான் காமாட்சியின் கொங்கைத் தழும்பலங்காரத்துடன் விளங்கு கின் ருர் இங்கு. முங்வர்கள் போற்றக் கங்கையைப் பார் மேற் கொணர்ந்தவர் பெருமான். தேவியின் தவத்தின் உண்மையை இறைவன் அளந்து சோதித்த கிருப்பதி கச்சி. ஏகம்பத்தில் உள்ள புண்ணிய சிலர்க்கு அடிமை பூண்டவர் களின் வலிய வினேகள் எல்லாம் மாய்ந்துபோம் : அச் சிலர் களைக் கைகொழுகலாலே கடுவினைகள் நீங்கும்; அவர்களைத் தலையால் வணங்கினவர்கள் தலைவர்களுக்கும் தலைவ ராவார்கள்: ஏகம்பரை நமது அஞ்ஞானம் கெடப் போற்று வோமாக; ஏகம்பத்து ஐயனேத் தொழுபவர்க்குத் துன்பமே வராது. ஐம்புலன்களின் கட்டை ஐயர் அவிழ்த்தருளு வார் ; நோய், வினே, தயர் வராமற் காப்பார் ; ஆதலால் ஏகம்பரின் தொண்டனுய்க் கிரிவோமாக. 27. கச்சிமேற்றவி கச்சிமேற்றளி காஞ்சிமா நகரில் உள்ளது. இத் தலத்திற் பாடலும் ஆடலும் விளங்கும். 28. திருக்-கச்சூர் திருக்கோயிலின் பெயர்-ஆலக் கோயில்.