பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) H f பிரானுர் ஆடுகின்ருர் . பொற்கழல் ஒலிக்க, அதிசயம் பொலிய, தேவர்கள் தொழுது போற்ற, எண்டிசையோரும் ஏத்த, அக்கியும் பகலும் அவர் ஆடுகின்றர். அம்பலத்தையே அவர் கோயிலாகக் கொண்டுள்ளார். ஆடும் பிரானுடைய உக்கியின் மேல் அசைத்த கச்சின் அழகைக் கண்ட கண், நெற்றிக் கண்ணைக் கண்ட கண், உடுத்த துகிலைக் கண்ட கண், சிரித்த முகத்தைக் கண்ட கண், அவர் விாலே, அவர் திருவடியைக் கண்ட கண்-வேறு ஒரு பொருளையும் காணுது, காண விரும்பாது. தில்லைச் சிற்றம்பலம் அன்னம் கொடுக்கும், பொன் கொடுக்கும். இத் கலத்திற் சிவ உடைய கிருவடியைத் கியானம் செய்யும் அடியார்கள் வாழ் கின்ருர்கள். பெரியோர்களும் தேவர்களும் வணங்கி வரம் பெறுகின்ருர்கள். இத் தலமானது செந்தி ஒம்பி வேள்வி யாற்றுதல் எப்போதும் உள்ள தலம். இலக்குமி வாசம் செய்யும் தலம். கிருமிக்க சிற்றம்பலத்தை உடைய கலம். திருவுடைய அந்தணர்கள் வாழ்கின்ற தலம்; கினை அளவும் வேக ஒலி குன்ருத கலம் ; தேர் விழா நடக்கும் கலம் ; விடங்க வேடத்தினர் கிறைந்துள்ள கலம். செம்பொன்னி ல்ை எழுதி மேய்ந்துள்ள சிற்றம்பலத்தைக் கொண்ட தலம். இறைவன் புலியூர்புக்க கோலத்தை விளக்குகின்ருர் அப்பர். ஒரு வீணே ஏந்தி, தீ ஏங்கி, பட்டு உடுத்து, தோல் போர்த்து, பாம்பொன்று அணிந்து, பூதங்கள் சூழ, புலால் வெண்டலை ஏந்தி, புலித்தோல் வீக்கி, சுடலையில் எரி ஆடி, சடைதாழ, வெண்ணிறனிந்து, பொன் தீ மணி விளக்குப் பூதம் பற்ற, விடைஏறி, வேகங்கள் ஒதி, கிருவா ரூரில் அக்திப் பொழுது ஆனதும் புறப்பட்டுக் கில்லேயிற் சிற்றம்பலத்தே புகுகின்ருர் பெருமான்-என்கின்ருர் அப்பர். தில்லைக் கூத்தப் பிரானுடைய கூத்துக்கு இணை யாக ஆடவல்லவர் ஒருவரும் இலர். ஞாலம் (பூமி) முழுதும் தில்லையில் அடங்கும். இக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதே நமது கடமையாகும். உலகத்துளே மிகச் சிரேஷ்டமானது தில்லைச் சிற்றம்பலம். ஆய்ந்த மலர்கொண்டு நீர் தூவிப் பெருமானேத் தொழுவீராக. தில்லைச் சிற்றம்பலத் -