பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) I வெண்கொடிகளைப் பறக்க விடுதல், சுடர்மணித் தீபங்களை ஒளிவீச வைத்தல், பவளமாலை, முத்துமாலை, வரிசைகளை பும், முத்து கொனங்களையும் விளங்கவைத்தலங்கரித்தல் ஆகிய வழக்கங்கள் இருந்தன. I 2. திருவிழாக் கூட்டத்தின் இயல் வயதில் மூப்பு அனுகாதவர்கள் முன் செல்வர், மங்கையர்கள் பின் செல்வர் ; திருநீறிட்டுப் பாடும் கொண் டர் கூட்டம் புடைசூழும். பக்கர்கள் முத்து விதானங்களே ஏந்துவர்; மங்கையர் மணிப்பொற் கவரிகளே வீசுவர் ; திருவிழாக் கூட்டத்திற் பணியும் பக்கர் கூட்டம் ஒருபால், வெண்டலை மாலை அணியும் விரதியர் கூட்டம் ஒருபால். ‘எம்பெருமானே ! உன்னே ஏத்தும் நாள் கான் இன்பம் தரும் நாள், உன்னைத் தொழாத நாள் துன்பம் கரும் நாள்:” என்று கூறுபவர் ஒரு சார்; இறைவனுடைய குணங்களைப் பாடிப் பாவிப் பித்தரைப் போலப் பிதற்றுபவர் ஒருசார் ; ஆடல் பாடல் செய்து ஆனந்தம் மேலிட்ட அன்பர்கள் ஒருசார்; பரவசப்பட்டுத் தங்கிலை அழிந்து முட்டும் பக்கர்கள் ஒருசார் ; பிணி தீரவேண்டிப் பணிபவர் ஒருசார் ; பக்தி மேலீட்டால் விம்மி விம்மி அழுபவர் ஒருசார்; இறைவனது சேவடியையே சிந்திக்கும் மாதர் கூட்டம் ஒருசார் ; இக் கூட்டத்தில் உமது பின்னே எம்மையும் அழைத்துச் செல்லும் என வேண்டுபவர் ஒரு சிலர்; ஆணும் பெண்ணும் இக் கூட்டத்தில் எப்படி அண்மையிற் சென்று கரிசிப்பது என மயங்குபவர் ஒருசிலர். 3. வாத்தியங்கள் விழாக்களில் கல்லவடம், வெண்சங்கு, பறை-இவை களின் பேரொலி கிறைந்திருக்கும். ஆனேகளின்மேல் முரச வாக்கியம் முற்படும். 4. விழா நடக்கும் தலங்கள் (1) திருவாரூரில்-திருவாகிரை விழா, பங்குனி உத்திர விழா.