பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) அண்ணுமலை, அதிகை, இடைமருது, ஒற்றியூர், கடம்பக் துறை, கடம்பூர், கொண்டீச்சுரம், . செம்பொன் பள்ளி, திருவேட்களம், தில்லை, நல்லம், கின்றியூர், பாாய்த்துறை, பாலைத்துறை, புகலூர், மயிலாடுதுறை ஆகிய தலங்களை வழிபடின் வினை மாய்ந்துபோம் ; சிவனென்று மெள்ள நினைக்க வினைகெடுவது மெய்ம்மை. F நாற்பத்தாறு இடங்களில் அருச்சுனனைப் பற்றிய விஷயங்கள் கூறப்பட்டுள அருச்சுனன் என்னும் பெயர் 2 இடங்களிலும், தனஞ்செயன் என்னும் பெயர் 3 இடங்களி லும், பார்த்தன் என்னும் பெயர் 23 இடங்களிலும், விசயன் என்னும் பெயர் 17 இடங்களிலும், பாண்டுவின் மகன்' என ஒரிடத்தும் வந்துள்ளன. நெடுங்காலம் இறைவன் திருவடியைத் தியானித் து விஜயன் தவநிலையில் இருந்தான். அவனது தவத்துக்கு இறைவர் இரங்கினர். அவனது உயர் தவத்தின் நிலையை யும், அவனது பக்கியையும், பலத்தையும் அறியும் பொருட்டுத் தாமும் பார்வதியும் ஆக இருவரும் வேட உருக்கொண்டனர். தாமொரு கோலுடை கட்டி, கோணிக் கொண்டையராய், வில் ஏந்திப், பலத்த சீழ்க்கை (விளி) யிட்டும், அடி முழக்குடனும், கொம்புடைய ஒரு பன்றியைக் காட்டில் வெருட்டி அதன் பின் சென்ருர், விசயன் அதன் மீது அம்பு எய்தபோது தாமும் அப் பன்றியின் மீது அம்பு எய்து அதை அட்டனர். அது சம்பந்தமாக விசயனெடு போர்புரிந்தார். அவனது மெய் யம்பைத் தமது பொய்யம்பால் தடுத்தார். அவன் மார்பிற் படும்படி ஒர் அம்பு எய்தார். அவனைக் கலங்க - வைத்தார். அவன் வலிமையைத் தேய்வித்தார். அவ லுடைய தவத்துக்கும் பக்திக்கும் இரங்கி அவனுக்கு அம்பும், வில்லும், அம்பருத் தாணியும், பாசுபதம் முதலிய படைகளும், கொடி நெடுங்கேரும் கந்தருளினர். தாய