பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) வைத்தார் சாமுண்டியை ; வேகத்தின் உச்சியில் அவர் விளங்குகின் ருர் ; நான்கு வேதங்களையும் கரைகண்டவர் அவர். இராவணன் தனது முன்கை நரம்பை வெட்டி இருக்குவேத இசைகளைப் பாட அவனுக்குப் பெருமான் அங்கை வாள் ஒன்று அருளினர் ; வேதங்களைப் பண்ணி னவர் அவர் ; விரித்தவர் அவர். அவர் கேட்கும் வீணே வேதப்பொருள் கொண்டது. அவர் வேத கீதர், வேதநாதர், வேத நாயகர், வேத நாவர், வேதப் படையர், வேத வித்து, வேதம் வல்லவர், வேத விதிகளைக் காட்டினவர், வேதக் கேள்விகளை விளங்க வைத்தவர். 3. சிவபிரான் வேதம் ஆய்தல் (188-8) - நான்கு வேதங்களையும், السلے مانیہ அங்கங்களையும் ஆய்ந்தவர் பெருமான். 4. சிவபிரான் வேதத்தைப் பாடுதல், ஓதுதல், விரும்புதல் முதலிய (188-4) தேவியின் ஊடலை ஒழிக்க வேண்டிப் பெருமான் சாம வேதம் பாடினர். உலக மல்லாம் ஒடுங்கிய பின்பு வேகத் கொலி கொண்டு வீணை கேட்டார். சாமவேத இசையை வீணையைக் கடவி எழுப்புவார். சாமவேத இசை அவருக்கு விருப்பம். சாமவேகம் பாடுவார். நான்கு வேதங்களையும் எப்போதும் பாடுவார். 5. வேதப்பொருள் சிவன் (188-5) இருக்கு வேகத்தின் பொருளாவார் பெருமான்; வேதங்களின் விழுப்பொருள் அவரே. 6. மறை (188-6) மறையும் ஆறங்கமும் அந்தணர்க்கு உரிய அரும் பொருளாவன. கிருஒற்றியூர் என்னும் கலத்தில் ஒமாகிகள், கான்மறைகளை ஒதுதல்-இவை எப்போதும் நடைபெறும்.