பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ திருச்சிற்றம்பலம்

தேவா ஒளிநெறியின் முதற்பகுதி தலைப்புக்கள் 1 முதல் 100 வரை, (அ முதல் சி வரையில்) 1946-ஆம் ஆண்டில் வெளிவந்தது. இரண்டாம் பகுதியாகிய இந்நூலில் தலைப்புக்கள் 101 முதல் 265 வரை (சி முதல் தெ வரையில்) வெளிவந்துள. இத்தலைப்புக்களின் விவரங்களை ஒளிநெறி முதற்பகுதி யில் பக்கம் xiii முதல் xxwiii வரையில் உள்ள

குறிப்புக்களிற் காணலாகும்.

சம்பந்தப் பெருமானது தேவாரப் பாடல்களின் ஆராய்ச்சியால் விளக்கமுறும் அவரது வாழ்க்கைக் குறிப்புக்கள், அவர் பாடியுள்ள கலங்களைப் பற்றிய குறிப்புக்கள், அவர் ஏத்தித் தொழுகின்ற முதற் கடவு ள்ாம் சிவபிரானது தன்மை, பெருமை, அருள், பராக்ரமம் முதலிய பலவகைக் குறிப்புக்கள் இப்

பகுதியில் வெளிவருகின்றன.

இறைவன் திருவருள் கூட்டிவைக்கத் தமிழின் ஆக்கத்தையும் சைவத்தின் பெருக்கத்தையும் தமது நோக்கமாகக் கொண்ட் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நாற்பதிப்புக் கழகத்தார். இப் பகுதியின் பதிப்புரிமையை அடைந்து வெளியிடுகின் ருர்கள். எஞ்சி நிற்கும் பகுதியின் பதிப்புரிமையை யும் வெளியிட்டையும் அவர்களே மேற்கொண்டுள் ள்ார்கள். அனைத்தும் நன்று நிறைவேற அந்தமில் அழகனும் அட்டமூர்த்தியின் திருவருள் கூடுவதாக அவனருளாலே கழகமும் கழகத் தலைவர்களும்

மண்னில் நல்ல வண்ண்ம் வாழ்வாராக !

பெற்றிகொள் பிறைநுதலிர்-டிமைப் பேணுதல்

கற்றறி வோர்கள்தங் கடனே.”

292, லிங்கசெட்டித் தெரு,

சென்னை, }

வ. சு. செங்கல்வராய பிள்ளை. 10-9-1950. ==