பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை ‘'தேவார ஒளிநெறி' எனப்படும் திருநெறியதமிழாம் திருமுறை விளக்கப்.ெ பருதுால் - திருவருள் நூல், திருவாளர், தணிகை மணி, ராவ்பகதூர் வ. சு. செங்கல்வராய பிள்ளை, எம். ஏ., அவர்களால் சிவ னருள் துணைக்கொண்டு யாக்கப்பெற்றது. இந்நூல் ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெரும்ா னர் பாடியருளிய முதல் மூன்று கிருமுறைகளுள் உள்ள கிருமறைப் பேருண்மைகளின் சிறப்பு முதலியன திகழும் திருமொழிகளைப் பல் வேறு தலைப்புக்களரகத் தொகுத்து அகரவரிசையில் அமைத்துள் ள ர்கள். அத்தொகை நானுாற்று அறுபத்தாருகும். அவற்றைத் தொகுதியாகப் பிரித்து வெளியிடுங்கால் மூன்று தொகுதிகளாயின. முதல் தொகுதி நூறு தலைப்புக்களைக் கொண்டது. அகரமுதல் சிகரம் வரை அமைந்திருக்கிறது. இரண்டாவது தொகுதி நூற்றறுபத்தைந்து தலைப்புக்களைக் கொண்டது. சிகரமுதல் தெகரம்வரை அமைக் துள்ளது. ای இம்மூன்ரும் தொகுதி இருநூற்ருெரு தலைப்புக்களைக் கொண் டது. தே முதல் ஜெ வரை அமைந்துள்ளது. இம்மூன்று தொகுதி களையும் திருவருள் துணைக்கொண்டு சித்தாந்த சைவர்கட்கும் செங் தமிழன்பர்கட்கும் அருட்பெருங் கருவூலமாய்த் திருமறைக் களஞ்சிய மாய்ப் பெறற்கரும்பெருஞ் செல்வமாய் ஆசிரிய அருட்பெரியாரவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். எனைய சிறப்புக்களே இரண்டாம் தொகுதிப் பதிப்புரையின்கண் காணலாம். இத்தொகுதிகள் அரும்பெரும் முயற்சியும், ஆண்டவன் அருட் டுணையும், பல்லாண்டுகளாக ஒவாதுழைக்கும் உழைப்பும், உலகத் தொண்டே உறுதிதரும் என்னும் ஊக்கமும் ஒருங்கியைந்த மேலோர்க் கன்றி வேறெவர்க்கும் எத்துணையும் ஏலா எனும் உண்மையும் ஒருங்கு திருவுருக்கொண்டவையாகும். இவ் அருட்பெரியார் கிருத்தொண்டின முற்றுவிப்பது, செயற் கரும் செயலாம் திருக்கோவில் எடுப்பிப்பது, சிறப்பொடு பூசனை செய் விப்பது முதலிய கிருத்தொண்டினும் மிக்கதாகும். - இவர்கள் ஆக்கியுள்ள ஆளுடைய அரசர், ஆளுடைய நம்பி என்னும் இரு பெருமுதலிகள் தேவார்க் குறிப்புக்களும் வெளிவர, அன்பர்கள் இம்மூன்று, த்ொகுதிகளையும் வாங்கியும் விங்குவித்தும் துணைபுரிவார் தி டுTT . - * சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்