பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தேவார ஒளிநெறிக் கட்டுரை பெருமை சேர் ஊர். இ. ரங் தோர் க்கு எங்காளும் , * பின்னர் வா’ எனக் காலம் பகராத கொடையாளர் வாழும் ஊர். புலவர்க்கு ஒருநாளும் காத்தல் செய்யாக் கலைநிறை செல்வர்கள் வாழும் ஊர். பரவித்திரியும் (கேத்திர யாத்திரை செய்யும்) பக்தர்களுக்கும், திருநீ ற ணி வோர் க்கும் காத்தல் இலாது கொடுக்கும் சான்ருேர்கள் வாழும் ஊர் ; கற்றல் கேட்டல் உடையார், கல்லார், கலிகடந்த கையர் வாழும் ஊர். மங்கையர் பண் பாடு பதி, மடவார்களது மங்கல ஒசை நீங்காத பதி. அவர்கள் பாடல் ஆடல் நாடோறுங் கண்ணெ திரே செய்ய விளங்கும் ஊர். அவர்கள் நடனம் ஆடி இறைவன் நாமங்களை ஏத்தித் துதி பல செய்யும் தலம். லக்ஷ்மி வாசஞ்செய்யும் பதி s - தலவிசேடம் :-இக்கலம் பூகங்களின் காவல் மிக்க ஊர். ஐந்தல நாகராஜனது காவல் கொண்ட பதி. மோடி (காடுகாள் - சத்தி) புறங்காக்கும் தலம். மண் ணுேரும் விண்ணுேரும் கித்தலும் பணிசெயக் கருதி விரும்பும் ஊர். தேவர்கள் குறும் பூமாலேயொடு வந்து வணங்கும் பதி. இந்திரனுக்கு இறைவன் அருளிய திருப்பதி. மகிடாசுரனைச் சங்கரித்த நீலி பணிந்து போற்றிய தலம். சித்தரும் அமரரும் மலர்கொண்டு வணங்கும் கேத்திரம். கோயிற் சிறப்பு:-இத் திருக்கோயிலில் இறைவர் தேவியுடன் என்றும் நீங்காது இனிதமர்ந் தருளுவர். கோயில் வானமோங்கு கோயில், கொடிமல்கு கோயில், கொடி தயங்குநற் கோயில், வென்றிசேர் வியன் கோயில் எனப்பட்டுளது. மறைவல்ல அங்கணர், மாதவர், கலை வல்லுநர், நீறு பூசிய உருவர், நெஞ்சில் வஞ்சமில்லார், பக்தர்கள் இவர்கள் திருக்கோயிலுட் சென்று பணிவர். சிங்தையை அடக்கிய பெரியோர் மலர்தூவிப் பணிவர் ; இருக்குவேதங் கூறிப் புகழ்ந்து வாழ்த்துவர். காழித் தலத்தை வழிபட வரு பலன் :-காழி அடியார் அவலம் அறியார். காழியை அடைய வினை ஒடும்.