பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தேவார ஒளிநெறிக் கட்டுரை குழும்; சாரலில் வேங்கைப் பூ பொன் சொரியும். மூங்கில்கள் உயர்ந்தோங்கு சாரலிற் கருங்குரங்குகள் விளையாடும். ஆண் குரங்குடன் ஊடிய பெண் குரங்கு கைம் மகவை ஏந்தி மூங்கிலிற் பாய மலைமீது ஏறும். முழவம் மந்த ஒலியுடன் ஒலிக்கும். உயரத்தில் மலை உச்சியில் திருக்கோயில் பொலியும். சிராப்பள்ளியைச் சென்றடையுங்கள். சிராப்பள்ளி அடிகளின் அடியார் களுக்கு அல்லல் இல்லை. o 105. சிவபுரம் :-பழங் காவிரியின் தென்கரையில் (அரிசிலாற்றின் அயலில்) உள்ளது. புனல் சூழ்ந்தது. திடமலி பொழிலில் - கமுகிற் செங்கனிகளை பறவைகள் இரவிலும் உண்ணும். மணம் விசு குரா மலரில் வண்டு தேன் உண்டெழும். பண்பாடும் வண்டு கிண்டச் செண்பகம் மலரும். பொய்கையில் அன்னச் சேவல் பெடையினைப் புல்கும். சிவபுரம் நீர்நிறை வயல்கள் சூழ்ந்த தலம். கனத்த சிலை மதிலைக் கொண்ட தலம். இறைவன் உறை தரும் கலம், நல்ல திறத்தை உடையவர்களும் உள்ளத் தணிவு கொண்டவர்களும் பயிலுங் தலம். புகழ் வீறு தலம். லக்ஷ்மீகரம் தரும் தலம். திருவிழாவில் எடுத்த வெண்கொடிகள் நெருங்கி மேகத்தை அளாவுங் தலம். அடியவர் பணிதரு தலம். நல்ல கணங்கள் மருவிய தலம். தேவர் பணிசெய்யும் தலம். வாகாவ தாரத்தில் தனது கொம்பின் தனியில் பூமியை நிறுத்திய திருமால் (வெள்ளை ப்பன் ثم( வழிபட்டு அருள்பெற்ற தலம். Tui சிவபுர நகரைக் கொழ வினைபோம், இருமையும் இடர்கெடும், புகழ்மிகும். சிவபுரம் என்று இருபொழுதும் வழிபடத் துயர்போம் : புகழ் கூடும். சிவபுரத்தை அடைய இடர்கெடும், வினபோம், உயர்கதி பெறுதல் திடம் , சிவபுரத்தை நினைபவர் எழில் உருப் பெறுவர் ; கலைமகள் அருளும், திருமகள் அருளும், ஜெயமகள் அருளும் பெற்றுத் திகழ்வர் ; உலகில் நிலை பெறுவர் ; அவர் சத்ததிகள் விளங்கும். சிவபுரத்தை வழிபடுதலே குணம். சிவபுரத் திறைவன் திருவடியைத் தொழுவோர்