பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தேவார ஒளிநெறிக் கடடுரை 143. பட்டிச்சரம் :- இங்கே, பொழில், எழிலும் கிழலும் கொண்டது; இருள் நிறைந்தது. மடையின் கயல் வயலிற் பாயும். பருவ மழையால் ஊர் பண்பெறும். கொடி வீதிகள் அழகுடன் விளங்கும். மண்ணில் தனக்கு நிகரில்லாது மாடங்களுடன் விளங்கும் மழபாடி நகரில் பழையாறை யதனுள் உள்ளது பட்டீச்சரம். அதன் விதி யெலாம் மணம் கமழும். பட்டீச்சரம்-காலையில் மடவார் கள் புனலாடும் ஒலி பெறும் ஊர். பிறவி, பிணி, மூப்பு இவைகளை நீக்கி இமையோருலகை விரும்புவர்களும், துறந்த உள்ளத்தை உடையவர்களும் வாழும் ஊர். முழ வதிர விழவு நடைபெறும் ஊர். இறைவர் காதலித்து உறையும் சீர் மிகும் ஊர். அவர் உமையுடன் உறையுங் தலம். அவர் கட்டமிட்ட கலம். கேவி பல்வளை நாயகி. பட்டீச்சாக்கை ஏக்க வினையும் பற்றும் ஒழியும். இத் தலத்தை ஏத்துவோர் வினையிலமாய் இறைவனே கறும் புகையாலும் ஏக்கொலியாலும் வழிபாடு மறவாது செய் வர் ; இவர் விண்ணுலகம் கண்ணல் எளிது ; விருத்தி யுற்று விண்ணுலகம் ஆள்வர். இத்தலத்து உறைவோர்க்கு விண்மிசை இமையோருடன் மேவுதல் எளிது. பட்டீசுரப் பெருமானது திருவடியை எத்த மேலுலகம் எளிதிற் கிடைக்கும். தியன விலகும். அப்பெருமானது கழலைத் தொழும் உள்ளம் உடையாரை வினை சாராது. 'அப் பெருமானது வேடத்தைப் பூண்டவருக்கு வீட்டு நெறி புலப்பட்டு வினை விடும். i 144. பந்தனை நல்லூர் :-இது சுவாமி பசுபதியார் காதலித் துறை தரு கோயில். அவர் (அமர்நீதி நாயர்ை பொருட்டுக்) கோவணங் கொண்டு நடித்த வஞ்சகர். 145. ப்ரங்குன்று :-கோங்கம், மாதவி, மல்லிகை வளரும் பொழிற் சாரலில் வண்டு ஒலிக்கும். மயில் பெடையைப் புல்கி மாடம் ஆடுஞ் சோலையில் பெடை, வண்டின் பாடல் ஒலி சதா ஒலிக்கும். இ ைற வன் இனிதமருந் தலம் பாங் குன்று. பரங்குன்றைத் தியானிக்குஞ் சிந்தை யுடையார்க்கு நோய் இல்லை. பரங்குன்ன்றத் சித்தத்திருத்தி இறைவன் திருவடியைக்