பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தேவார ஒளிநெறிக் கட்டுரை கமுகம் பழமானது நீர் நிலைகளிலும், தெங்கின் குலமீ தும், வாழையின் மீதும் விழும். வண்டு பண் பாடும், கிரம்ப மதுவுண்டு தாமரை மலர்மீதிருந்து பண்பொருந்த யாழ் வாசிக்கும். மணங் கமழும் தாமரைக் கழனிகள் குழ்ந்து விளங்கும். மயிலும் குயிலும் பயிலும். திருப் பழனம் பறையுஞ் சங்கும் பலியும் நீங்காத நகர். சங்கொலி யும் திருவிழா ஒலியும் எப்பொழுதும் முழங்கும் நகர். இங்கு அடியார் மலர்கொண்டு பரவி ஆடல் பாடல் செய்வர். பொய்யாமொழியார் எத்திப் புக்ழ்வர். நாதா, கக்கா, நம்பா எனக் கூறிப் பாதங் தொழுவாருடைய பாவத்தைத் தீர்ப்பார் பழன நகர் நாதர். 150. பழுவூர் :-இருண்ட பொழிலின் நறுமணம் வீசும். தெங்கில் இளநீர் பொலியும். கமுகில் பட்டை யொடு தாறு விரியும். குரங்குக் கூட்டங்கள் பொழிலில் பழம் உண்டு பரந்த நீர் வயலருகே விளையாடும். மாடங்களின் குளிகையில் (மேல் தளத்தில்) ஏறி மாதர்கள் பாடல் ஒலி எழுப்புவர். மாதர்கள் பால் போல மிழற்றி நடமாடுவர். அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகிற் புகையில் மாதர் சுவடு ஒற்றும். இத்தலம் மலையாள அந்தணர்கள் ஏத்தும் பந்தம் உடைய ஊர். மலையாளர் ஆடித் தொழுதேத்திப் பண்ணுெலியுடன் பயி அலும் ஊர். கடவுளை ஆய்ந்து கால் வேதங்களையும் ஆறங் கங்களையும் கற்ற பெரியோர்கள் சபைகளில் உடனிருந்து மகிழ்ந்த ஊர். இறைவன் புகழை மடந்தையர்கள் பூவைக்குச் சொல்லிக் கொடுத்துத் தாம் கற்பொடு பொலி யும் ஊர். பத்கரும் சித்தரும் பயில்கின்ற ஊர். மறை யாளர் வேதமொழி சொல்லி இறைவனது பாதங்களை எததும ஊா. 151. பறியலூர் :-அன்னங் திளேக்கும் நீர்நிலையையும், திரை கிறை புனலையும், மணம் வீசி விரிந்து விளங்கும் மலர்ச் சோலையையும், விளையும் வயலையும், கொடிசூழ் தெருவையுங் கொண்டு விளங்கும் ஊர். கலம் வீரட்டத் தலம். சுவாமி வீரட்டத்தார் தமது தேவி இளங்கொம்ப H