பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தேவார ஒளிநெறிக் கட்டுரை மிக்க பெரியோர் ஏத்தும் பதி. திருவிழா வோசையும், விரும்பிவந்த அடியார் நெருக்கமும், கடலும் அயர்வெய் தும் படியாக முழங்கும் முழவோசையும் கொண்டுள்ள தலம். மலரும் புனலும் கொண்டு பத்தர்கள் பூசித்துத் துதித்துத் தவ நிலையில் கின்று உயர்வானுலகை எய்தற் கிடமாம் திருப்பதி. அடியவர் தொண்டு செய்தொழில் மிக்க பதி. பூவும் நீரும் பலியும் சுமந்து அடியார்கள் புகலூரை நாவினுற் புகழ்ங்கேத்துவார்கள். இறைவர் புகலூரிற் பொருளாய் அமைந்துள்ளார். நெஞ்சே! நீ உய்ய விரும்பினுல், புகலூருக்குப் போதற்கு எழு! புகலூர் அானர் பாகத்தைத் தியானிப் பவர் குலக்கவராயினும், குலமிலராயினும் உலகில் நல்ல அ; தி பெறுவர். சாமி காதை சரண் ” என்று கூறித் கலை வணங்குமின். புகலூர்ப் பெருமார்ை திருவடியை காளும் பரவ இடர்கழியும். அவர் பாகத்தைக் கொழுது உய்யுங்கள். அவரை அடைய வல்லவர் அவருலகம் ஆளப்பெறுவார். புகலுரைப் புகழ்ந்தால் பொருள் கைகூடும். புகலூரையே தியானிக்கும் உள்ளம் உடைய வர்களே ! உங்கள் துயர் தீரும். 162. புகலூர் வர்த்தமானிச்சரம்:-மலர்ப்பொழிலில் மேகமும் மதியும் தவழும். தளிர்க்கொடி வளரும், புள் தன் பேடையோடாடும். மதுவுண்ட வண்டு பண் செய்யும். சுனைகளில் (மலர்) மலரும் : கழனியில் கயல் நிறையும், கருங்குவளைகள் மலரும். வயலில் வாளையுங் கயலும் குதிகொள்ளும். புகலூர்-புனல் சூழ்ந்த ஊர். பொலிவு கொண்ட ஊர். அஞ்ஞானம் நீங்கத் தமிழ்மொழி, வடமொழி, திசைமொழி கொண்டு நரப்புக் கருவிகளை வாசித்து (அடியார்கள்) தொழுதெழும் பழைய ஊர். தொண்டர் கள் போற்றி வலஞ்செய்து அடிபாவும் ஊர். முருக (நாயனர்) கயத்தில் முழுகி மாலை, சாந்தம், புகை இவை கொண்டு முப்போதும் பூ சி த் து இறைவனுக்கு அலங்காரம் செ ய்யும் ஊர்.