பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தேவார ஒளிநெறிக் கட்டுரை பட்டவனுமான சடாயுவின் ஊர் புள்ளிருக்கு வேளுர். இது சடாயுவுடன் சம்பாதியும் வழிபட்ட கலம், இறை வன்.அவர் இருவரையும் ஆண்டருளிய தலம். பாபங் களுக்கு இடமான உடல் நோயைத் தீர்ப்பவரும், திவினைக்கு ஒரு மருக்கானவரும், திறங்கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராது காப்பவருமான பூரீவயித்திய நாதப் பெருமான் அமருங் தலம். 166. புறம்பயம் -வண்டு (மலர்) அவிழ்க்குத் தலம். அடியார் வழிபாடு ஒழியாத தலம். (சனகாதி) நால் வருக்கு அறத்தின் பயன இறைவன் உரைத்தருளிய தலம். தேவி : கரும்பன்ன சொல்லம்மை. 167 புறவார் பனங்காட்ர்ே:-டிேய தேனர்பொழில் சூழ்ந்த ஊர் மாகவி, புன்னை, அசோகம், காமரை, மல்லிகை, ஞாழல் சூழ்ந்த ஊர். காங்கள் மலரும் ஊர் அன்னம் மல்கும் மலர்ப் பொய்கையில் வண்டு ஒலிக்கும். கோடல் அலர. முல்லை, நீர்மலர்கள் காது அவிழப் பாடல் வண்டு ஒலிக்கும். வண்டினம் தேன் உண்டு நீல மலறைக் கெளவி நேரிசைப் பண்ணில் யாழ் முதலும். வாளையுங் கயலும் விளங்கும் பொய்கையின் கறையெலாம் வயலும், கமுகும் நிறைநது பொலியும், கயலும் சேலும் செருச் செய்யும. மேதி (எருமை) மேய்ந்து இளஞ் செந்நெற் கதிரைக் கெள விக் காலையில் வயலிற் பாயும். இத்தலம் பாரினர் கித்தம் பிரியாத தலம். பண் னெலி விரியும் ஊர். சம்பந்தப் பெருமான் (அடியார்க்கு) அருளாயே ’’ எனப் பாடல் தோறும் வேண்டிய பதிகம் இவ்வூர்ப் பதிகம். 168. புன்கூர் :-இத்தலத்தில் மணியும் முத்தமும் திரையில் உலாவும். வயல் சூழும். வயலிற் கழுநீரும் செந் நெலும் பொலியும். காமரை மலர்கின்ற வயலிற் கயல்மீன் திளே க்கும். வண்டுபாட மலர் விரியும். சேடர் செல்வர் உறைவர். சுவாமி திருப்புன்கூர் அழகர் எனப் பட்டுள்ளார். இங்கு தேரோடும் வீதியில் திருவிழா நடைபெறும். இது தேவரெல்லாம் வணங்குங் தலம்,