பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. அடியார்

3


3. அடியார் தன்மை [5] :-இறைவனைப் பத்தியுடன் போற்றுதலே அடியாருடைய இலக்கணம், அடியார் மறத் துறைகளை நீக்கி, இறைவனை உள்ளத்திற் சிக்கெனப் பிடித்து, இரவும் பகலும் நல்ல வாய்மொழிகளால் இறைவனை ஏத்திப் பொய்யிலா அடிமை புரிவார். இறைவன் நம்மை ஆள்வான் என்னும் உறுதியுடன் பன்னாள் பணிவார்.

4. அடியார் கூட்டம்:-வட்டம் வட்டமாகச் சூழ்ந்துநின்று இறைவன் கிருவடியைப் பரவும். தலங்கள் தோறும் சென்று சென்று பரவித் திரியும் அடியாரும் உண்டு; பித்தர் போன்ற பத்தர்களும் உண்டு.

5. அடியார் அடையும் பயன் :-சதா பத்தி செய்வதால் அடியார் தீப மனத்தினராய் (மன விளக்கம் உடையவராய்)த் தீயன அறியாராய்த் திகழ்வர். இத்தகைய பத்தர்களுடைய மார்பைவிட்டு லக்ஷ்மீதேவி பிரியாள்.

6. அடியார் செய்ய வேண்டுவது [5 (2)]:- ஐம்புலன்களையும் முனிந்து அவைகளை அடக்கவேண்டும்.

7. அடியார்க்கு அடியார் [5 (3)] :- அடியார்க்கு அடியாரைத் தொழுது பணிபவருக்குத் தூயநெறி எளிதிற் கைகூடும்; அவரை நோய், தீவினை அடையா; அவரைக் கண்டாற்கடிய கூற்றுவனும் அகலுவான்; அவர் இனைவன் ஒருவனே நமக்குப் பெருந்துணை எனக் கொண்டு வாழ்பவர்; அடியர் கூட்டமாய் வரினும் தனித்து வரினும் அவரைப் பணிதலே குணமெனக் கொண்டார் குலச்சிறை நாயனார்.

8. அடியார்க்கு அமுதளித்தல் [5, (4, 8)] :-அடியார் பசித்திருக்கலாகாது. திருஞான சம்பந்த சுவாமிகள் காலத்தில் அடியார்க்கு அன்னம் அளித்தல் ஒரு திருவிழாப் போன்ற உயர் தருமமாகக் கொள்ளப்பட்டது போலும்.

9. அடியார்க்குத் துணை, கதி [5 (5)] :-இறைவன் திருவடி அல்லது வேறு சரண் அடியாருக்குக் கிடை