பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தேவார ஒளிநெறிக் கட்டுரை விழும். தெங்கு மேகம் அளாவும். வாசப் புன்னே, மெளவல், செங்கழுநீர் இவைகளை அணைந்து தென்றல் வீசும் பொழிலில் தேன் துளி சேரும் பொழில் நுழை தென்றல் மணம் வீசும். வான் தோயும் மதில் மருங்கில் வளம் வாய்ந்த பொழிலில் வெயில் தணிந்து ஒளி வீசும்; குளிர் புனலும் அலர் பொழிலும் பொலிவு தரும். (மாதர்தம்) பல்போல முத்தும், முகம் போலத் தாமரை யும், விழிபோலக் கயலும், வாய்போலப் பவள்மும் திகழ் தரும். கிளியும் மயிலும் பயிலும் பொழிலில் ஞாயிறு சும்பைப் பொலிவிக்கும். படித்த நான் மறைகளைக் கேட்ட கிளிகள் பதங்களை ஒதப் பக்கத்திருந்த விடைக் குலம் அவைகளைப் பயிலும். பண்டிதர்கள் பன்னளும் பயின்ருேதும் ஒசை கேட்டுப் பொழிற் கிளிகள் வேதங் களுக்குப் பொருள் சொல்லும். சேற்றிற் கரிய ஆமையின் அகடு நிலவென வெண்மை காட்டும். வயல்களிலும் நீர் கிலைகளிலும் பங்கயம் மலரும். செங்கமல வேலியைக் கொண்ட வயலில் உள்ள செந்நெற் பொழில் வழியே தென்றல் நுழைந்து மணம் வீசும். மரகத கிறமும் புனலும் அணைந்து விளங்கும் வயலும் பொழிலும் பொலியும். தாமரையில் இலைக் குடையின் கீழ் நெற்கதிர் - சாமரை யிாட்ட இள அன்னம் வீற்றிருக்கும்; தன் இளம் பெடையைப் புல்கி மகிழும். பொய்கையில் தாமரை மலர்மேல் அன்னம் நடைபயில வெண்தாமரை செந்தாது உதிர்க்கும். வயலில் விசையுறு புனல் சேரும். நல்ல விளைவு பொலியும் வயலில் அரிங் தெடுத்த சும்மை வான் அளாவும். செங்கமலங்கள் வேலி போலச் குழும் வயலில் செந்நெல் வளரும். பொய்கைகளிற் செங்கமலங் கள் மலர்ந்து செந்திப் போலச் சுடரொளி வீசும். ஊரில், நீண்ட மதில் விளங்கும். மதிலில் மேகம் உரிஞ்சும், மதிதவழும். ஒளிவாய்ந்த மணி மாடங்களும், மந்தர மலைபோன்ற மணி மாளிகைகளும், மேகங் தோயும் வெண் கனக மாளிகைகளும், விண்ணுலவு மாளிகைகளும் அழகுபெற விளங்கும். மலையன்ன கன்மதிலும், செங்தனக _ மாளிகைக்ளும், விலையுயர்ந்த மாடங்களும் பொலியும்.