பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. அரக்கர் - அசுரர் - அவுணர்

9


9. ஞானம், புகழ், வீடு அருளுவர்; பிணி, வினை முதலிய நீக்குவார் [6 (10, 11, 17)]:- இறைவர் தமதடியவருக்கு நற்குணம், ஞானம், செல்வம், உயர்நிலை, பெருமை, புகழ் இவைகளை அருளுவார். வானவரின் மேம்பட்ட நிலையை அருளுவார். சிவகதி, சிவ்சாரூபம், வீட்டின்பந் தருவார்: “தாமே தானாகச்” செய்வார்.

பிணி, நோய், பழி, பாவம், பிறப்பு, இறப்பு, மலம், மாசு, பாசம், வினை இவைதமை நீக்கி அருளுவார்.

10. சிவபிரானது அருமை, எளிமை [6 (20-23)]:— அயலும் மாலுங் காணா அருமையர் சிவபிரான்; அன்புடைய அடியவருக்கு அணியர், எளியர்; மாலும் பிரமனும் அஞ்ச அழலாய் நின்றவர்; அடியார்க்கு அருள் பயக்கும் நிழலாய் நிற்கின்றவர். அமரர்க்கு அரியவர். ‘எங்கள் பெருமான்’ என்பார்க்கு உரியவர். அன்பு செய்பவருக்கும் ஐம்புலன் வென்றவருக்கும் எளியவர்; மற்றவர்க்கு அரியவர்; பத்தி செய்வோர் பக்கல் வெளிப்படுவார்; பத்தி செய்யாதவரிடம் ஒளிப்பார்; அடியாரிடம் இணங்குவார், மற்றவரிடம் பிணங்குவார். பத்தர் கூட்டத்தில் இச்சையுடன் அமர்வார்; பத்தி யிலாதார்பால் கரப்பார்.

11. சிவபிரானும் அடிய ரல்லாதாரும் [6 (23)]:— அடிய ரல்லாதார்க்கு இறைவன் திருவருள் கிட்டாது. ஆதலின், இறைவனை நினைந்து உருகாதவர் உணர்வை என்னென் றுரைப்பது?

5. அரக்கர் - அசுரர் - அவுணர் [8]

இவர்கள் வன்மை வாய்ந்தவர்கள் ; மாயம் வல்லவர்கள்; கருநிறத்தவர்கள்; பெருங் கோபத்தினர்கள்; இரவில் திரிவார்கள்; நீரிலும் வானிலும் இயங்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

(i) அந்தகாசுரன் :- அறைகழல் அணிந்தவன்; சிவபிரான் அடியைப் பணிய நீரும், மலரும், தீபமும், தூபமும் நிறைந்திருந்த மலையகத்தே புக்குத் தீதுசெய வந்