பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தேவார ஒளிநெறிக் கட்டுரை போலும் ' என்னும் சொற்கள் உண்டு’ என்னும் பொருளிலும்-வந்துள்ளன H 143. மரம், QF4 கொடி, மலர் முதலிய(854) (பழம்-என்னும் தலைப்பினும் பார்க்க) (i) (1) அகில் :-மலையில் வளரும்.தொண்டர்களும் பெண்களும் இதன் புகையை இறைவனை ஏத்த உபயோகப்படுத்துவார்கள்.காளத்தி போன்ற தலங்களில் இதன் புகை விசும்பை அளாவிற்று; மகளிர் கூந்தலுக்கும் அகிற்புகை ஊட்டுவது உண்டு. அந்தணர்களின் ஆகுதிக்குப் பயன்படும். (2) இலவம் :-முள் உள்ளது. (b) எருக்கு :-வெள்ளெருக்கு உண்டு. குளிர்ச்சியை உ விடயது . (4) ஏலம்:-வாசனை கொண்டது. (5) கமுகு -தாடேயது. கூந்தற் குலைகளைக் கொண்டது. வாழைக் குலேயிற் கமுகு குலையின பாளையில் தேன் பாய்ந்து ஒழுகும், கமுகின் குழை தரு கண்ணிகள் ஊசலை ஒக்கும். கமுகின் காய்கள் முத்துப்போல அரும்பு விட்டு, மரகத நிறத்துடன் காய்த்துப், பவளநிறத்துடன் பழுக்கும். இதன் பாளையில் இருந்து பாயும் மதுவை உண்டு மக்திகள் குதிக்கும். கமுகு மலைநிலத்தில் வளரும்; உயரமாய் வளரும். (6) காங்தை :-இதன் தளிரைச் சிவபிரான் சூடுவர். (7) கரும்பு : தேன் போலச் சுவைக் கட்டி தரும். நீர் வளப்பத்தில் நெருங்கித் கண்டுபோலப் பருத்து வளரும். செழுமையும் இனிப்பும் கொண்டது. 藝 (8) கழுநீர் :-நீரிற் சேற்றில் வளர்ந்து மலரும். (9) கற்பகம்:-தெய்வலோக விருகம். கொடைக்குப் பேர்போனது.