பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தேவார ஒளிநெறிக் கட்டுரை


முகலி (பொன்முகலி நதி) [17 (16)]:- அகில், கரும்பு, கனிகள், சந்தனம், சாதி, தேக்கமரம், மணி, மருது, முத்து, வேங்கை இவைகளை வெள்ளத்தில் உந்தி வருவது.

வைகை [17 (17)]:- மதுரை நகர் வழியாக வருவது; செடிகள் கரைகளில் நிரம்பியது; தென்றற் காற்று மலிந்தது; அகில், கோடு, சந்தனம்,பொன், மணி, இவைகள் கடல்சேர உந்தி வருவது.

குறிப்பு:- ஆற்றங்கரைத் தலங்கள்:- தலைப்பு 85-பார்க்க.

8. (2) பொய்கை, குளம், மடை, வாவி [348]

எருமைகள் படிந்து குளிக்கும் ஒடைகள், ஆவிகள் (நீர்நிலைகள்) இருந்தன。 மாதர்கள் பொய்கைகளில் குடைந்து விளையாடுவர். மடைகளில் வாளையும் கயலும் விளையாடும்; பொய்கைகளில் நெய்தல், கருங்குவளை, தாமரை மலரும். வாவிகளில், காவி, கரு நீலம், கமலம் மலரும்; தாமரை, நெய்தல், கழுநீர், ஆம்பல், நீலம், புட்கள் இவை நிறைந்து பொய்கைகள் பொலிந்தன. திரு வெண்காட்டு முக்குளங்கள் வினை துரக்கவல்லன; நினைத்த காரியத்தைக் கைகூட்டி வைப்பன. கோகர்ணத்தில் “ஹர (ஹர) தீர்த்தம்” விஷநோயைத் தீர்த்த புகழ்பெற்றது.

9. இசையும் பண்ணும் [19, 312]

1. இசை:- இன்னிசையாற் பாட வல்லவரும், கீதத்தை மிகப் பாடும் அடியார்களும், பண்ணிய நடத்தொடும் இசைபாடும் அடியார்களும், வண்ணம் மூன்றுந் தமிழில் தெரிந்து இசை பாடுபவரும், வேற்றுத் திசை இசைகளைக் கேட்டுத் தேர்ந்து ஆயும் பெரியோர்களும், இசை பாடும்பொழுது விம்மி யழும் பெரியோர்களும் இருந்தார்கள். செந்தமிழ்க் கீதம் பொலிவுற் றிருந்தது. கீதம் வல்ல வாய்மையால் இறைவனை உணர்ந்துரைக்க