பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 தேவார ஒளிநெறிக் கட்டுரை வாசிப்பதில் வல்லவன். (iii) ராவணன் சிவபக்தன், திருநீறு பூசுபவன்; ஐந்தெழுத்து ஒதுபவன்; அவன் மனைவி வண்டோதரியும் ஐந்தெழுத் சோதுபவள். (10) ராமாயணம்:-ராவணன் காமத்தால் நெறி யிழந்தான், அறிவிழந்தான், பூரீராமருடைய தேவி வைதேகியை (சீதையைக்) கானகத்தில் மாயையாற் கவர்ந்தான்.பூரீ ராமருக்காக வந்து பொருத சடாயுவினல் புண்படுத்தப் பட்டான். பூரீராமரால் உயிரிழந்தான். 162 ராவணனும் சிவனும் (388) (1) ராவணன் கயிலையை எடுத்ததும், நெரிப் புண்டதும், இசைபாடி அருள் பெற்றதும்:-இராவணன் கயிலைமலையை அனுகினதும் எனது தேர் அப்புறம் போகவேண்டும், ஆதலால் இம்மலையைப் பேர்ப்பேன், ண்ேடி யெடுப்பேன், என முழங்கிப் பாய்ந்தெழுந்தான். 'என்ன இந்த மலை! இதன்மேல் ஒரு பெருமானும் இருக் கின்றனரோ, பார்க்கிறேன் அதைத்தான்’-என கிந்தனை செய்து வெகுண்டான். உமையாள் கணவன் விரும்பி வீற்றிருக்கும் கிருமலையாயிற்றே இது; இதனை வலஞ் செய்து செல்வதே வாய்மை என உணரும் மதியிலாத வய்ை அச்சமிலாது, கூசாது, மதியாது, கொதித்தெழுந் தான். எனக்கு மேல் வலிமை ஒருவருக்கு உளது என ஒப்புக்கொள்ளேன், என் எதிர் பொருவார் யார்’-எனக் கூறியெழுந்தான்.தனது வாட்போர்த்திறத்தையே கினைத் துச் சினத்துடன் எழுந்தான். இங்ங்னம் தனது வலியே பெரிதென நினைத்து, அஞ்சுதலின்றி, அறிவீனத்தால் எதிரோடித் தனது கால்களை ஊன்றித் தனது கண்னும் வாயும் நெருப்பெழ, மெய் கலங்க, தனது இருபது காங் களையும் நிறுவி, விண்ணும் அதிர அக்கயிலை மலையை வேரோடும் பேர்த்தசைத்து அலைத்துக் குலுக்கி கிலை குலையச் செய்து சடசட என எடுத்தான்; அப்படி யெடுக்கும்பொழுது உமாதேவி பயந்தனள். தேவி பயந்த தைக் கண்ட பெருமானர் முறுவல் செய்து தமது ஒரு காலின் விரல்களுள் ஒரு விரலில் உள்ள நகத்தின்