பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தேவார ஒளிநெறிக் கட்டுரை வண்டுகள் சோலையில் வசிப்பன; வாவியில் சஞ்சரிப்பன; அழகியன; அழகிய சிறைகளைக் கொண்டன; கரு நிறத்தின, நீல நீறத்தின், கேசுள்ளன, தேனை நாடுவன, தண் சிறையன, பொறி வாய்ந்தன, வரி கொண்டன, ஒலி செய்வன; மழலை மொழிவன; பண் பயிலுவன; மூக வன; நறுமணத்தை நாடுவன; மலர்களில் உள்ள மதுவை உண்பன; உண்டு களிப்பன; மும்மென்று இசை முரலுவன,சண்பகக் காட்டில்கேன் பெறப் போர் புரிவன; மரக் கொம்புகளில் அமர்வன; குறியுடன் பாடுவன, கூட்டமாய்க் கூடிக் கலந்து பூக்களில் உள்ள மதுவை உண்பன: காலையில் மலர்களைக் கெண்டுவன; மலர்களைக் கெள வித் தேனைப் பருகுவன; தேனை உண்ப தால் வண்டுகளுக்குக் களிப்பு மிகும்; களிப்பு மிகுந்து அவை இசை முரலும், பாடும். கேன் வண்டுகள் பண் பயிலும், பாடும், யாழ் வாசிக்கும். வண்டுகள் தாமரை மலரில் தங்கும்; முல்லை, சண்பகம், குருங்கம் ஆகிய மலர் மிசைஏறும்; கொன்றை, செங்கழுநீர், நெய்தல் மலர்களில் உலவும்; தாமரை மலர்களிற் புக்கு விளையாடும்; தாமரை மலர்த் தேனைப் பருகிக் களிக்கும். தும்பி வண்டுகள் கோடல் மலர்களில் முழுகிச் சஞ்சரிக்கும். வண்டுகள் புன்னை மரங்களில் உலவும்; நறும் பொழில் களில் செழிப்புள்ள மலர்களை நாடும்; அவை தமை நெருங்கிக் கோதும், அளையும்; மலர்த் தேனை நாடித் திரியும்; இனிமையான பழங்களில் உள்ள தேனைப் பருகும்; வண்டுகள் மலரை ஊதி மதுவை உண்பதால் மலரின் இதழ்கள் விரியும். பொழிற் சோலையில் தேனும் வண்டும் திளைக்கும். கன் காதல் வண்டு உண்டு களித்த தால் உதிர்ந்த புன்னைத் தாதினைக் கண்டு பெண் வண்டு ஊடிப் பொழிலில் மறையும். அல்லி மலரைப் புல்லி வண்டுகள் உறங்கும். வண்டு தன் பெடையைப் புல்லித் தேன் நிறைந்த மலரில் துயிலும். 164. வயல் - கழனி (898) வயல்களிற் செந்நெல் காடுபோல வளரும். நெற் கதிர்கள் அசைந்துகொண்டிருக்கும் வயல்களிற் சேறும்,