பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.90 தேவார ஒளிநெறிக் கட்டுரை (i) மயில், வண்டு முதலிய:-மாதவி மரத்தில் வண்டு இசைபாட மயிலாடும். புன்னை செம்பொன் கொடுக்கும். மயில் நடனஞ் செய்யக், கடல் முழக்கஞ்செய்ய, வண்டு இசை முரலும், தாமரைத்தேன் உண்டு வண்டு இசை பாட, மயிலாட, விண் அதிர்ந்தொலிக்கும். மலை மிசைப் படிகின்ற மேகம் முழவுபோல ஒலிக்க, மயில்கள் பல நடனம் ஆட-வண்டுகள் பாடும், கொன்றை பொன் வீசும், காங்கள் கையேற்கும். வண்டுபாட, மயில் ஆல, மான்கன்று துள்ள, கெண்டை பாயச் சுனையில் நீல்ோற் பல மலரின் மொட்டு மலரும். மயில் நடமாட, வண்டு பாட, கோடல் கையசைப்ப, அன்னம் பேடையோ டிே மகிழும். (ii) வெண்குருகு காழை வெண்மடலைத் தனது இளம்பெடை எனக் கருதிப் புல்கும். மடல் அவிழ்ந்த வளைங்க தாழையின் நிழலைக் குருகு எனக் கருதிக் குளத்தில் உள்ள கெண்டைமீன் தாமரைப் பூவின் கீழ் மறையும். அதைக்கண்டு கைப்பது போல் முத்துக்கள் ஒளிவீசும். o (iii) குளங்கள்தோறும் மாதர்தம் முகம்போலத் தாமரை மலரும்; அவர்கம் வாய்போலச் செங்குமுதம் மலரும், பவளம் நிறங்காட்டும்; அவர் கண்கள் போலக் கருங்குவளையும் நெய்தலும் மலரும், கயல் மீன்விளங்கும்; அவர் பற்கள்போல் முத்து ஒளிவீசும். (iv) தெங்கின் இளநீர் கீழே கமுகின்மேல் விழ, கமுகின் தாறு சிதறி வாழையின்மேல் விழ, வாழையி லிருந்து விழுங்கனிகள் வயலில் ஊறிச் சேறு செய்யும். (v) வயலருகே மான் பாயும், மந்திகள் மரத்தின் மீதேறும், மடுக்கள்தோறும் தாமரை மலர்மீது மீன் பாயும், அதனல் தேன் ஒழுகத் தாமரை மொட்டு மலரும. (wi) தேரைகள் ஆரையிலை சாய மிதிகொள்ளும்; வாளை குதிகொள்ள வள்ளை துவளும். நாரைகள் ஆால் மீன்களை வாரி எருமைகள் தங்கு வயலில் வைகும்.